பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 2.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

இன்ஷூரன்சு - இஸ்ரவேல்

செய்துள்ள தொகை முழுவதையும் கம்பெனியிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம்.

ஒரு வணிகர் தம் சரக்குகளைக் கப்பலில் வெளிநாடுகளுக்கு அனுப்புகிறார். ஒரு விபத்துக்குட்பட்டுக் கப்பல் கடலில் மூழ்கிவிடுகிறது. அவர் நம் சரக்குகளை இன்ஷூர் செய்திருந்தால், அவருக்கு உண்டான நட்டத்தை இன்ஷூரன்சுக் கம்பெனி ஈடுசெய்யும். இதற்குக் கடல் இன்ஷூரன்சு என்று பெயர். வெள்ளம், வறட்சி போன்ற காரணங்களால் பயிர்கள் அழிந்து விவசாயிகளுக்கு இழப்பு நேரிடலாம். இந்த இழப்பை ஈடுசெய்ய அவர்கள் 'பயிர் இன்ஷூரன்சு' செய்து கொள்ளலாம். இதைப் போலவே கார், வீடு, தொழிற்சாலை ஆகியவற்றுக்கும் இன்ஷூரன்சு செய்துகொள்ளலாம். அஞ்சல் மூலம் நாம் அனுப்பும் ஒரு பொருளையும் இன்ஷூர் செய்யலாம். அந்தப் பொருள் பழுதடைந்தாலோ அல்லது காணாமல் போய்விட்டாலோ அதற்கான ஈடு நமக்குக் கிடைத்துவிடும்.

இன்ஷூரன்சுக் கம்பெனி ஒரு சிறு தொகையைத் தவணையில் வாங்கிக் கொண்டு, பெருந்தொகையை ஈடாகக் கொடுத்து வருவதால் கம்பெனிக்கு நட்டம் ஏற்படும் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், உண்மையில் அப்படி நட்டம் ஏற்படாது. ஏனென்றால், இன்ஷூர் செய்தவர்களில் மிகச் சிலர்தான் திடீரென இறப்பார்கள். பெரும்பாலார் ஒழுங்காகப் பணம் செலுத்தி வருவார்கள். இதன் மூலம் கம்பெனிக்குப் பணம் வந்துகொண்டிருக்கும். இந்தப் பணத்தைப் பல தொழில்களில் முதலீடு செய்வதன் மூலமும் கம்பெனிக்கு வட்டியும் இலாபமும் கிடைத்துவரும். ஆகவே இன்ஷூர் செய்தவர்களுக்குக் கம்பெனி ஈடுசெய்ய வேண்டிய தொகை மிகக் குறைவாகவே இருக்கும். இந்தியாவில் 1956 முதல் ஆயுள் இன்ஷூரன்சை மத்திய அரசாங்கமே நடத்தி வருகிறது. 'இந்திய ஆயுள் இன்ஷூரன்சுக் கழகம்' என்ற மிகப் பெரிய நிறுவனம் இதைக் கவனித்து வருகிறது. மற்ற இன்ஷூரன்சுகளைத் தனியார் நிறுவனங்கள் நடத்துகின்றன. தொழிற்சாலைத் தொழிலாளர் களுக்கான 'ஊழியர் அரசு இன்ஷூரன்சு' (Employees' State Insurance) என்ற திட்டத்தையும் அரசாங்கம் நடத்துகிறது.

இன்ஷூரன்சுக் கம்பெனி ஒப்புக்கொண்டால் நாம் விரும்பும் எதையும் இன்ஷூர் செய்யலாம். லண்டனிலுள்ள லாயிட்ஸ் என்ற கம்பெனியிடம் ஒரு நடிகை தன் முகத்தை மட்டும் இன்ஷூர் செய்துகொண்டாள்! ஒரு பியானோ இசைவாணர் தன் விரல்களையும், ஒரு நாட்டியக்காரி தன் கால்களையும் இன்ஷூர் செய்துகொண்டார்கள்!


இஸ்ரவேல்: புதிதாகத் தோன்றிய ஒரு நாடு இஸ்ரவேல். 1948-ல் யூதர்களுக்காக இது அமைக்கப்பட்டது. இங்கு வாழ்பவர்கள் பெரும்பாலோர் யூதர்களே. உலகில் பல இடங்களிலும் வாழும் யூதர்கள் இங்கு வந்து குடியேறலாம்.

இஸ்ரவேல் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பாலஸ்தீனம் என்ற நாட்டின் ஒரு பகுதியாக இருந்தது. அப்போது அங்கு யூதர்கள் வாழ்ந்து வந்தனர். இயேசு கிறிஸ்து காலத்தில் பாலஸ்தீனம் ரோமானியப் பேரரசின்கீழ் இருந்தது. பிறகு அதை அராபியர் கைப்பற்றிக் கொண்டனர். அதனால் யூதர்கள் அஞ்சி அங்கிருந்து வெளியேறினர். அராபியரை அங்கிருந்து வெளியேற்றுவதற்குப் பல பெரும் போர்கள் நடைபெற்றன. ஆனால் அராபியரே அதை ஆண்டு வந்தனர். முதல் உலக யுத்தத்தின் முடிவில் பாலஸ்தீனம் பிரிட்டிஷ் பாதுகாப்பின்கீழ் வந்தது. இரண்டாம் உலக யுத்தத்தின் முடிவில் பாலஸ்தீனம் இரு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது. ஒரு பகுதியை அராபியர் பெற்றனர். ஒரு பகுதி யூதர்களுக்கு அளிக்கப்பட்டது. யூதர்களுக்கு அளிக்கப்பட்ட பகுதியே இஸ்ரவேல் என்ற ஒரு தனி நாடாயிற்று.

யூதர்கள் தமக்கென இஸ்ரவேலைப் பெற்றது சுற்றியுள்ள அரபு நாடுகளுக்குப்-

இஸ்ரவேல்

[மத்திய தரைக் கடல் இலபனன் மீன் பழம் எருசலேம் பார்லி துது கோதுமை திராட்சை ஒலிவ கனி துணி வகைகள் ரசாயனப் பொருள்கள்]