பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 2.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

52

எஃகு - எக்ஸ் கதிர்கள்


[பல்லி இனத்தைச் சேர்ந்த பச்சோந்தி ஆமை]


வெப்ப ரத்தப் பிராணிகளும்; தூயத்தாரா; பல்லி; பழங்கால உயிர்வாழ்க்கை; பாம்பு: முதலை; முதுகுத்தண்டுள்ளன.


எஃகு: இரும்பில் மூன்று வகை உண்டு. அவற்றுள் ஒன்று' எஃகு. இது ஓர் உலோகக் கலவை (த.க.). மிகவும் கடினமானது. ஊசி முதல் ரெயில் தண்டவாளங்கள் வரை பல பொருள்கள் எஃகினால் செய்யப்படுகின்றன. இரும்பும் எஃகும் என்ற தலைப்புடைய கட்டுரையில் எஃகைப் பற்றிய விவரங்களை அறியலாம்.


எக்ஸ் - கதிர்கள் ( X-Rays ) : நீங்கள் போட்டோ எடுத்துப் பார்த்திருப்பீர்கள். போட்டோப் படங்கள் எடுப்பதற்கு ஒலி (த.க.) தேவை, போட்டோவில் உங்கள் உருவம் மட்டுந்தான் தெரியும்; உடலின் உள்ளே இருக்கும் உறுப்புகள் எதுவும் தெரிவதில்லை. ஒளிக்குப் பதில் எக்ஸ் கதிர்களைக் கொண்டு ஒரு போட்டோ எடுத்தால் உடம்பினுள்ளே உள்ள உறுப்புகள் அதில் தெரியும். இந்த எக்ஸ்-கதிர்களை ரன்ட்கன் (Ronigen) என்ற ஜெர்மானிய விஞ்ஞானி 1895-ல் கண்டுபிடித்தார்.

எக்ஸ்-கதிர்கள் தற்செயலாகக் கண்டு பிடிக்கப்பட்டவையே. குறைந்த அழுத்தத்தில் வாயு நிரப்பிய ஒரு குழாயில் மின்சாரத்தைச் செலுத்திய பொழுது, அதன் அருகிலிருந்த சில பொருள்கள் ஒளிர்வதை ரன்ட்கன் கண்டார். குறுக்கே ஒரு திரையை நிறுத்தி மறைத்தபோதும் அந்த ஒளிர்வு தொடர்ந்து காணப்பட்டது. இவ்விளைவு ஒருவகைக் கதிர்களால்தான் ஏற்படுகிறது என்பதை அவர் அறிந்தார். ஆனால் அக்கதிர்கள் எங்கிருந்து வந்தன, அவை எப்படி உண்டாயின என்று அவருக்கு அப்போது விளங்கவில்லை. தெரியாத ஒன்றை X என்ற ஆங்கில எழுத்தால் குறிப்பது வழக்கம். எனவே, அவரும் அக்கதிர்களை 'எக்ஸ்-கதிர்கள்' என்று குறிப்பிட்டார்.

ஒளியைப் பார்க்க முடியும்; ஆனால் ஒளிக்கதிர்களைப் பார்க்க முடியாது. எக்ஸ்-கதிர்களையும் நாம் பார்க்க முடியாது. ஒளிக்கதிர்கள் ஊடுருவ முடியாத சில திடப்பொருள்களையும் எக்ஸ்-கதிர்கள் ஊடுருவிச் செல்லும். இந்த அரிய இயல்பினால் எக்ஸ்-கதிர்கள் பல வழிகளில் நமக்குப் பயன்படுகின்றன.

[[சிறுவன் ஒருவனுடைய உணவுக் குழாயில் சிக்கிக்கொண்ட கோலிக்குண்டு. வரி வரியாக உள்ளவை மார்பு எலும்புகள்.]]