பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 2.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

எகிப்து 53


கீழே விழுந்துவிட்ட ஒருவருடைய கால் எலும்பு நன்றாக இருக்கிறதா அல்லது முறிந்துவிட்டதா, எந்த இடத்தில் முறிந்திருக்கிறது என்ற விவரங்களை எக்ஸ்-கதிர்களைக் கொண்டு எடுக்கப்பட்ட போட்டோவிலிருந்து தெரிந்துகொள்ளலாம். காசு ஒன்றை மிட்டாய் என்று எண்ணிக் குழந்தை விழுங்கிவிடலாம். அந்தக் காசு குழந்தையின் உடலில் எங்கிருக்கிறது. என்பதையும், துப்பாக்கிக்குண்டு பாய்ந்த எங்கு உடலில் குண்டு ஒருவனுடைய தங்கியிருக்கிறது என்பதையும் எக்ஸ்-கதிர் போட்டோவில் கண்டுபிடித்துவிடலாம். எக்ஸ்-கதிர்கள் அதிக சக்தி வாய்ந்தவை. உடலில் எழும்பியுள்ள கட்டிகளின் மேல் எக்ஸ்-கதிர்களைப் பாய்ச்சி சிகிச்சை செய்கிறார்கள். எக்ஸ்-கதிர்களினால் இன்னும் பல பயன்கள் உண்டு.

தொழிற்சாலைகளில் எந்திரங்களின் உறுப்புகளில் பழுது ஏதேனும் ஏற்பட்டிருக்கிறதா என்பதைக் கண்டுபிடிக்கலாம். ரேடியோ வால்வு போன்ற நுட்பமான கருவிகளின் உள்அமைப்பு ஒழுங்காக இருக்கிறதா என்று அறிந்து கொள்ளலாம். ஆகாய விமானங்களின் எஞ்சின்களில் ஏற்படும் மிகச் சிறிய பழுதுகளையும் கண்டுகொள்ளலாம். இவை மட்டுமன்றி நேரில் கண்ணுக்குப் புலப்படாத இன்னும் பல குறைபாடுகளையும் எக்ஸ்-கதிர் போட்டோ நமக்கு வெளிப்படையாகக் காட்டிவிடுகிறது.

எக்ஸ்-கதிர் நிறமாலைகாட்டி ( X - Ray Spectrograph ) என்று ஒரு கருவி உள்ளது. இதன் மூலம் ஒரு திடப்பொருளில் அதன் அணுக்கள் எவ்வாறு அமைந்துள்ளன (அணு அமைப்பு - Atomic Structure) என்பதை விளக்கமாகத் தெரிந்துகொள்ளலாம்.

எக்ஸ் - கதிர்களால் பல நன்மைகள் நமக்கு ஏற்படுகின்றன. ஆனால் அவற்றை மிகவும் எச்சரிக்கையோடு பயன்படுத்த வேண்டும். தவறினால் அவற்றல் கேடு விளையும். ஏனெனில் எக்ஸ் - கதிர்கள் உடல் திசுக்களையே அழித்துவிடக் கூடியவை. எக்ஸ்-கதிர்களைக் கையாள்பவர்களுக்குத் தோல் நோய்களும், புண்களும் உண்டாகக்கூடும். அவற்றைத் தவிர்க்க அவர்கள் பாதுகாப்பான உடைகளை அணிந்துகொள்ளுவார்கள். அடிக்கடித் தம் உடலைப் பரிசோதனை செய்து கொள்வார்கள்.


எகிப்து: ஆப்பிரிக்காக் கண்டத்தின் வடகிழக்குக்கோடியில் உள்ள நாடு எகிப்து. பழங்காலத்தில் நாகரிகத்தில் சிறந்து விளங்கிய நாடுகளுன் இது ஒன்று. நாட்டின் பரப்பு 10,04,000 சதுர கி.மீ.

எகிப்து

மக்கள் தொகை 27 கோடி. உலகிலேயே மிக நீளமான நைல் ஆறு இந்நாட்டில் பாய்கிறது. நைல்பாயும் நீண்ட பள்ளத்தாக்கைத்தவிர மற்றப் பகுதிகளெல்லாம் வறண்ட பாலைவனமாகும். எகிப்திய மக்களுள் பெரும்பாலோர் செழிப்பான இந்தப் பள்ளத்தாக்குப் பகுதியில்தான் வாழ்கின்றனர். வேளாண்மை இங்கு முக்கியத் தொழில். கோதுமை, பார்லி, சோளம், கரும்பு, நெல், காய்கறிகள் முதலியன முக்கிய விளைபொருள்கள். உயர்தரமான பருத்தி இங்கு மிகுதியாக விளைகிறது. இதைப் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறர்கள்.

செங்கடலுக்கும் மத்தியதரைக் கடலுக்கும் இடையே வெட்டப்பட்ட சூயெஸ் கால்வாய் (த.க.) மூலம் எகிப்துக்கு அதிக வருமானம் கிடைக்கிறது. இக்கால்வாயின் மூலம் ஐரோப்பாவுக்கும் ஆசிய நாடுகளுக்கும் இடையே உள்ள கடல்வழி நீளம் குறைந்துவிட்டது.

எகிப்தின் தலைநகர் கைரோ. ஆப்பிரிக்கா கண்டத்திலேயே இதுதான் மிகப்பெரிய நகரம். கைரோவுக்கு அருகில் உள்ள பிரமிடுகள் உலகப் புகழ் பெற்றவை. கூம்பு சதுர வடிவமுள்ள இக்கோபுரங்கள் உலக அதிசயங்கள் (த.க.) ஏழினுள் ஒன்றாகக் கருதப்படுகின்றன. இவற்றுக்குள்ளேதான் பண்டைய எகிப்திய மன்னர்களின் சடலங்கள் கெட்டுப்போகாமல் அடக்கம் செய்யப்பட்டுள்ளன. 4,000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்தப் பிரமிடுகள் இன்னும் சிதையாமல் உள்ளன. இக்கோபுரங்களின் உட்புறத்தில் சுவர்களின்மேல் சித்திரங்களும், வண்ண ஓவியங்களும் தீட்டப்பட்டுள்ளன. ஒரு விதச் சித்திர எழுத்துகளால் விவரங்களையும் குறிப்புகளையும் எழுதியுள்ளனர். 5,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்த பல-