பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 2.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

54 எஞ்சின்கள் - எடிசன்

மன்னர்கள் வழிவழியாக ஆண்டுவந்த விவரங்களை இவற்றிலிருந்து தெரிந்துகொள்ள முடிகிறது. இவர்களுடைய காலத்தில் எகிப்து சீரும்சிறப்பும்பெற்று ஒரு பேரரசாக விளங்கியது. பிரமிடுகளுக்கு அருகில் கல்லினால் செதுக்கப்பட்ட ஸ்பிங்க்ஸ் என்ற புகழ்பெற்ற கற்சிலை ஒன்றும் உள்ளது.

எஞ்சின்கள்: நம் வேலையை எளிதாக்குவதற்குப் பலவகை எந்திரங்களைப் (த.க.) பயன்படுத்துகிறோம். மோட்டார் கார், மோட்டார் சைக்கிள், பஸ் போன்றவற்றில் பல இடங்களுக்குச் செல்கிறோம். இவை இயங்குவதற்குத் தேவையான சக்தியை அளிப்பவை எஞ்சின்கள். இவற்றை இயக்கும் எஞ்சின்களுக்கு உள்ளெரி எஞ்சின்கள் (த.க.) என்று பெயர். இவ்வகை எஞ்சின்களில் பெட்ரோல் அல்லது டீசல் எண்ணெய் எரிக்கப்படுவதால் அவை இயங்குகின்றன.

ரெயில் வண்டியை இழுத்துச் செல்லும் நீராவி எஞ்சினை நீங்கள் பார்த்திருப்பீர் கள். இதில் நிலக்கரி எரிவதால் வெப்பம் கிடைக்கிறது. இவ்வெப்பத்தைக் கொண்டு நீராவியை உற்பத்தி செய்து எஞ்சினை இயக்குகிறார்கள்.

நீராவியைக் கொண்டு பெரிய சக்கரங்களைச் சுழலச் செய்யலாம். இவ்வாறு சக்கரங்களைச் சுழலச்செய்து மின்சாரம் உற்பத்தி செய்யலாம். இவ்வகை எஞ்சின்களுக்கு நீராவி டர்பைன்கள் என்று பெயர்.

ஜெட் விமானத்தில் உள்ள எஞ்சினுக்கு தாரை எஞ்சின் என்று பெயர். உள்ளெரி எஞ்சின்களால் இயங்கும் விமானங்களைவிடத் தாரை எஞ்சின்களால் இயங்கும் ஜெட் விமானங்கள் வேகமாகச் செல்லும். சந்திரன், வெள்ளி, செவ்வாய் ஆகிய கோள்களுக்குச் செலுத்தப்படும். ராக்கெட்டில் பயன்படுவது ராக்கெட் எஞ்சின் ஆகும். காற்றே இல்லாத வெற்று இடத்திலும் இயங்கக்கூடிய தன்மை ராக்கெட் எஞ்சினுக்கு மட்டுமே உண்டு.

மேலே கூறப்பட்டுள்ள ராக்கெட் எஞ்சினைத்தவிர மற்ற எஞ்சின்களில் பெட்ரோல் அல்லது டீசல் எண்ணெய் அல்லது நிலக்கரி முதலிய எரிபொருள்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை எரிவதால் வெப்பம் கிடைக்கிறது. வெப்பசக்தி எஞ்சின்களை இயக்குகின்றது. இவ்வகை எஞ்சின்களுக்கு வெப்ப எஞ்சின்கள் என்று பெயர்.

உள்ளெரி எஞ்சின், தாரை எஞ்சின், நீராவி எஞ்சின், ராக்கெட் ஆகிய தலைப்புகளில் தனிக் கட்டுரைகள் உள்ளன. அணு சக்தியைப் (த.க.) பயன்படுத்தியும் எஞ்சின்களை இயக்கலாம்.


எடிசன், தாமஸ் ஆல்வா (1847- 1931): சினிமா, மோட்டார் கார், தந்தி, டெலிபோன் போன்ற எத்தனையோ சாதனங்களை இன்று நாம் பெற்றுள்ளோம். இவை எல்லாம் நமக்கு எப்படிக் கிடைத்தன? பல விஞ்ஞானிகள் நீண்ட காலம் அயராது உழைத்து இவற்றை உருவாக்கினர். அத்தகைய விஞ்ஞானிகளுள் ஒருவர் தாமஸ் ஆல்வா எடிசன். அமெரிக்காவில் மிலான் என்ற ஊரில் எடிசன் பிறந்தார். இளம் வயதிலேயே இவருக்கு ஆராய்ச்சிகளைச் செய்வதில் விருப்பம் அதிகம். வகுப்பில் திறமைமிக்க மாணவராக விளங்கினாலும் தமது ஏழ்மையால் இவரால் கல்வியைத் தொடர்ந்து கற்க முடியவில்லை, பள்ளியிலிருந்து வெளியேறிவிட்டார்.

ஆனால் எடிசன் தமது ஆராய்ச்சிகளை நிறுத்தவில்லை. சிறுசிறு வேலைகளில் இருந்துகொண்டே ஆராய்ச்சி செய்துவந்தார். தம் வாழ்நாள் இறுதிவரை ஆராய்ச்சியிலேயே காலங்கழித்தார். புதுப்புதுக் கருவிகளை இவர் கண்டுபிடித்துள்ளார். மின்சார விளக்கு, சினிமா, தொலைபேசி, கிராமபோன், தட்டெழுத்துப்பொறி முதலியவை இவர் கண்டுபிடித்தவையே. தந்தி அனுப்பும் கருவியை இவர் திருந்திய முறையில் மாற்றி அமைத்தார். இவரது கண்டுபிடிப்புகளின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்திற்கும் அதிகமாக - [[தாமஸ் ஆல்வா எடிசன். இந்த விஞ்ஞானியின் ஆராய்ச்சிகளினால் நாம் இன்று பல சாதனங்களைப் பெற்றிருக்கிறோம்.]]