பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 2.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

இருக்கும். "இடைவிடாத உழைப்பினால் தான் இவ்வளவு பொருள்களை என்னால் கண்டுபிடிக்க முடிந்தது" என்று எடிசன் கூறியிருக்கிறார்.


எண்கள்: உங்கள் வகுப்பிலுள்ள மாணவர்களை எண்ணிக் கூறும்படி சொன்னால் நீங்கள் ஒன்று, இரண்டு, மூன்று. என்று எண்ணுகிறீர்கள். இதனை எழுதும் பொழுது "1, 2, 3,… என்று எழுதுகிறீர்கள். ஒன்று, இரண்டு, மூன்று என்று எழுத்துகளில் எழுதுவதைத்தான் 1, 2, 3... என்னும் குறிகளால் சுருக்கமாக எழுதுகிறோம். இந்தக் குறிகளையே எண்கள் என்கிறோம்.

ஆதியில் மக்கள் படங்கள் மூலம் எண்களை எழுதிக் காட்டினார்கள். அமெரிக்க இந்தியர்கள் அண்மைக்காலம் வரை சித்திரங்கள் வரைந்து எண்களைக் குறிப்பிட்டு வந்தார்கள். ஒரு படகில் பத்துஆட்கள் இருப்பதைக் குறிப்பிட, படகில் பத்து ஆட்கள் இருப்பதுபோல் படம் வரைந்தார்கள். ஒரு பயணத்திற்கு மூன்று நாட்கள் ஆகியிருந்தால், படத்தில் மூன்று சூரியன்களை வரைந்து காட்டினார்கள். ஆனால், இந்தியாவில் 50 கோடி மக்கள் இருப்பதைச் சித்திரம் வரைத்து காட்ட முடியுமா?

சிலர் எண்களை எழுதுவதற்கு மரக் கட்டைகளில் வெட்டுக் குறிகளைச் செய்தார்கள். பானைகளில் கோடுகளை வரைந்து காட்டினார்கள். எகிப்தியர்கள் ஒன்று முதல் பத்து வரையுள்ள எண்களைக் குறிக்க நேர்க்கோடுகளைப் பயன்படுத்தினர்கள். நூறு, ஆயிரம், பத்தாயிரம் இவற்றுக்கு அவர்கள் வேறு குறிகளைக் கையாண்டார்கள். கிரேக்கர்கள் தங்களுடைய மொழி எழுத்துகளையே எண்களுக்கும் பயன்படுத்தினார்கள். ரோமானியர்கள் எண்களை எழுத ஒரு தனிமுறையை வகுத்திருந்தார்கள். இன்றும் சில கடிகாரங்களில் இந்த எண்களை நீங்கள்


I II III IV V VI VII VIII IX X XI XII 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 XX XXX XL L LX LXX XC C CX 20 30 40 50 60 70 90 100 110

CC CCC CD D DC CM M MC MM 200 300 400 500 600 900 1000 1100 2000 MCMLXX: 1970

[ரோமானிய எண் குறிகள்]

பார்க்கலாம். இந்த முறையில் பெரிய எண்களை எழுதுவது கடினம். மேலும், பெருக்கல், வகுத்தல் போன்ற கணிப்புகளைச் செய்வதும் எளிதல்ல. எனினும் ஐரோப்பா முழுவதும் பல நூற்றாண்டுகள் இம்முறைதான் வழங்கிவந்தது. சீன முறை, பாபிலோனிய முறை ஆகியவையும் வழக்கத்திலிருந்தன.

எண்களை எழுதுவதற்கு இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள முறைகள் அனைத்திலும் சிறந்தது இந்தோ-அராபிய முறையே ஆகும். இந்த முறையை முதலில் கண்டுபிடித்துப் பயன்படுத்தியவர்கள் இந்தியர்களேயாவர். இதில் 1, 2, 3, 4, 5,6,7,8,9,0 என்னும் பத்து எண்களே உள்ளன. இவற்றைக்கொண்டு எவ்வளவு பெரிய எண்களையும் எழுதிவிடலாம். இதில் உள்ள பூச்சியம்தான் இம்முறையின் தனிப்பெருஞ்சிறப்பாகும். எந்த எண்ணோடும் பூச்சியத்தைச் சேர்த்துப் பெரிய எண்களை உண்டாக்கலாம். எடுத்துக்காட்டாக, ஐந்துக்குப் பின்னால் ஒரு பூச்சியம் சேர்த்தால் 50; இரண்டு பூச்சியங்கள் சேர்த்தால் 500; மூன்று பூச்சியங்கள் சேர்த்தால் 5000. ரோமானிய முறையைவிட இந்த முறை மிகவும் எளியது. கணிப்புகளைச் செய்வதும் எளிது. இந்தியாவுடன் வாணிகம் செய்து-


இந்தோ-அராபிய எண்குறிகள் I 2 3 மாயா எண்குறிகள் கிரேக்க எண்குறிகள் A B பாபிலோனிய எண்குறிகள் எகிப்திய எண்குறிகள் சீன எண்குறிகள்