பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 2.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

58 எந்திரங்கள் - எரிபொருள்கள்


எந்திரங்கள் இயங்குவதற்குச் சக்தி தேவை. நீராவி எஞ்சின் வெப்ப சக்தியாலும், மின்சார விசிறி மின்சக்தியாலும் இயங்குகின்றன. உயரமான இடத்திலிருந்து விழும் நீரைக் கொண்டும், பேரழுத்தத்துடன் பீறிட்டு வெளியாகும் நீரைக் கொண்டும் எந்திரங்களை இயக்கலாம். இவற்றுக்கு டர்பைன்கள் என்று பெயர். வேகமாக வீசும் காற்றைக் கொண்டு காற்றலைகள் (த.க.) இயக்கப்படுகின்றன. எந்திரங்கள் சிலவற்றில் எஞ்சின்கள் (த.க.) உள்ளன. எந்திரங்கள் இயங்குவதற்குத் தேவையான சக்தியை இந்த எஞ்சின்கள் அளிக்கின்றன. பார்க்க: எஞ்சின்கள்

சாமானிய (எளிய ) எந்திரங்கள் : பல எந்திரங்கள் பார்ப்பதற்குப் மிகப் பெரியவையாக இருந்தாலும் அவை யாவும் மிக எளிய அடிப்படையான அமைப்பைச் கொண்டவை. இந்த அடிப்படையான அமைப்புகள் மொத்தம் ஆறு உண்டு. எந்த ஓர் எந்திரத்தை எடுத்துக்கொண்டாலும் அதில்இயங்கும் உறுப்புகள் ஒவ்வொன்றும் இந்த ஆறு அமைப்புகளுள் ஏதேனும் ஒன்றுக்கு உட்பட்டதாகவே இருக்கும். நெம்புகோல், கப்பி, சாய்தளம், உருளையும் இருசும், ஆப்பு, திருகு ஆகிய இவை சாமானிய (எளிய) எந்திரங்கள் எனப்படும்.

நெம்புகோலில் மூன்று வகை உண்டு, பளுவான கல் ஒன்றைப் பெயர்த்தெடுக்கவோ, நகர்த்தவோ நாம் ஒரு நீளமான கழியை அல்லது கடப்பாரையைப் பயன்படுத்துகிறோம். தேர்களை நகர்த்த இந்த முறையைக் கையாளுவதை நீங்கள் பார்த்திருக்கலாம். பாக்கு வெட்டியும் குறடும் நெம்புகோலின் வேறுவகைகளே.

கிணற்றிலிருந்து நீர் இறைக்கத் தாம்புக் கயிற்றை ஒரு கப்பியில் மாட்டி இழுக்கிறோம். ஒரு பளுவை மேல்நோக்கித் தூக்குவதைவிடக் கீழ்நோக்கி இழுப்பது எளிதாக இருப்பதாலேயே கப்பியை நாம் கையாள்கிறோம். பல கப்பிகளைச் சேர்த்துப் பயன்படுத்தினால் அதிக எடையை மிகக் குறைந்த சக்தியால் தூக்கமுடியும். படத்திலுள்ள கப்பி அமைப்பில் இருக்கும் எடையை ஓர் அடி மேலே தூக்குவதற்குக் கயிற்றை ஐந்து அடி கீழே இழுக்க வேண்டும்; இந்தக் கூட்டுக்கப்பி அமைப்பில் 25 கிலோ எடையைத் தூக்குவதற்கு 5 கிலோ சக்தி இருந்தாலே போதும்.

பளுவான பொருள் ஒன்றை மோட்டார் வண்டியில் ஏற்றவேண்டுமானால் அப்பொருளை அப்படியே தூக்கி வைப்பதைவிட, ஒரு சாய்தனத்தின்மீது நகர்த்தி ஏற்றுவது மிக எளிதாக இருக்கும். இதனால் அப்பொருள் நகர்த்தப்படும் தூரம் அதிகம் ஆனாலும், வேலை எளிதில் முடிந்து விடுகிறது.

உருளையும் இருசும், ஆப்பு, ஆப்பு, திருகு ஆகிய எளிய எந்திர அமைப்புகளைப் படத்தில் காணலாம். பல்லிணைகளும் (Gears) உருளை - இருசு வகையைச் சேர்ந்தவையாகும். நாம் பழம் நறுக்க பயன்படுத்தும் சுத்தியும் மரத்தைப் பிளக்கப் பயன்படுத்தும் உளியும் ஆப்புகள் தாம். ஒரு மோட்டார் வண்டியின் சக்கரத்தை மாற்றுவதற்கு மாற்றுவதற்கு அவ்வண்டியைத் தூக்கி நிறுத்த வேண்டும். அதிக எடையுள்ள மோட்டார் வண்டியைத் தூக்க ஜாக்கி என்ற எளிய எந்திரத்தைக் கையாளுகிறார்கள். இந்த ஜாக்கி திருகின் அடிப்படையில் இயங்குகிறது.

எந்திரங்களால் நன்மையும் உண்டு; சில குறைபாடுகளும் உண்டு. வேலை எளிதாகவும், விரைவாகவும், குறைந்த செலவிலும் செய்து முடிக்க எந்திரங்கள் உதவுகின்றன. எந்திரங்களால் தொழில்கள் பெருகிப் பலருக்கு வேலை வாய்ப்பு ஏற்படும் என்றாலும், பலர் கையால் செய்யக் கூடிய ஒரு வேலையை எந்திரத்தின் துணைகொண்டு ஒருவரே செய்துவிடுவதால் பலருக்கு வேலைஇல்லாமல் போய்விடும். எந்திரங்களை முறை தவறிக் கையாண்டாலோ, எந்திரங்களில் கோளாறு ஏதேனும் ஏற்பட்டாலோ விபத்துகள் நேரிடலாம்.


எரிபொருள்கள்: சமையல் செய்ய அடுப்புக்கு விறகு வேண்டும். மண்ணெண்ணெயினால் எரியும் அடுப்புகளும் உள்ளன. எளிதில் தீப்பற்றி எரியக்கூடிய வாயு உலகில் சில இடங்களில் பூமியிலிருந்து இயற்கையாகவே வெளி வருவதுண்டு. நிலக்கரியிலிருந்தும் பெட்ரோலியத்தி லிருந்தும் எரிவாயு உற்பத்தி செய்கிறார்கள். இந்த எரிவாயுவைக் கொண்டும் நகரங்களில் அடுப்பு எரிக்கின்றனர். அடுப்பு எரிக்க மின்சாரமும் பயன்படுகிறது. எரிக்க உதவும் இந்தப் பொருள்களுக்கு எரிபொருள்கள் என்று பெயர். காகிதம், நார், துணி முதலியவையும் பற்றி எரியும்; ஆனால் விரைவில் எரிந்து விடும்; சூடு உண்டாகாது. ஆதலால் இவற்றை எரிபொருள்களாகப் பயன்படுத்தமுடியாது. நெய்யும், நல்லெண்ணெயும் எரியும். ஆனால் அவை விலை யுயர்ந்தவை; மேலும் அவை அதிக வெப்பத்தைக் கொடுப்பதில்லை. எரிபொருள்கள் மலிவான விலையில் கிடைக்க வேண்டும்; நெடுநேரம் நின்று எரிய வேண்டும்; அதிக சூட்டைத் தரவேண்டும்.

ரெயில் எஞ்சின்கள், மோட்டார் வண்டிகள், கப்பல்கள், விமானங்கள்,