பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 2.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

எரிபொருள்கள் - எரிமலை 59

தொழிற்சாலை எஞ்சின்கள் ஆகியவற்றை இயக்குவதற்கு எரிபொருள்கள் அவசியம். எரிபொருள் திடப்பொருளாகவோ, திரவப் பொருளாகவோ, வாயுவாகவோ இருக்கலாம்; அல்லது, மின்சாரமாகவும் இருக்கலாம். விறகு, அடுப்புக்கரி, நிலக்கரி, பழுப்புக்கரி ஆகியவை திடப்பொருள்கள். பெட்ரோலியம் (த.க.) எண்ணெய் வகைகள், ஆல்கஹால் ஆகியவை திரவப் பொருள்கள்; எரிவாயு வாயுப்பொருளாகும்.

கருங்காலி, ஈட்டி முதலிய மரங்கள் மிகவும் கடினமாக இருக்கும். கடினமான மரத்தின் விறகு நன்றாக எரியாது; புகையும். இலேசான விறகுகளும் புரையுள்ள விறகுகளும் நின்று எரியா; அதிக வெப்பமும் கொடுப்பதில்லை.

அடுப்புக்கரி நன்றாக வெந்திருக்க வேண்டும். அரை வேக்காட்டுக் கரி புகையும்; அதிக வெப்பமும் தராது. நல்ல அடுப்புக் கரியில் வெப்பம் அதிகம் கிடைக்கும்; அதிகச் சாம்பல் விழுவதில்லை. அதனால் அது சூளைகளுக்கும், சிறு உலைகளுக்கும் எரி பொருளாக உதவுகின்றது. சோதனைச் சாலைகளில் விளக்குகள் எரிக்க ஆல்கஹால் எரிபொருளாகப் பயன்படுகிறது.

நிலக்கரி மிகவும் அதிகமான வெப்பம் கொடுக்கும். இதை நீராவி எஞ்சின்களில் எரிக்கின்றார்கள். நெய்வேலியில் கிடைக்கும் பழுப்புக்கரி நீராவி எஞ்சின்களுக்கும், அடுப்புகளுக்கும் பயன்படுகின்றது.

பெட்ரோல், மண்ணெண்ணெய், டீசல்எண்ணெய், கச்சா(குரூட்) எண்ணெய் ஆகியவற்றுக்குப் பெட்ரோலியம் எண்ணெய்கள் என்று பெயர். இவை திரவ எரிபொருள்கள் ஆகும். கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் புதையுண்டு மட்கிப்போயுள்ள தாவரங்களிலிருந்து வடிந்து பெட்ரோலியம் தரைக்கு அடியில் தேங்கி இருக்கின்றது. குழாய்களின் மூலம் இவற்றை எடுக்கிறார்கள். திரவ எரிபொருள்கள் எரியும்போது சாம்பல் விழுவதில்லை. இவை குறைந்த அளவில் அதிக வெப்பம் கொடுக்கக் கூடியவை. எஞ்சின்களையும் உலைகளையும் இவை அரித்துப் பழுதாக்குவதில்லை.

எரிவாயுவை மூடப்பட்ட தொட்டிகளில் காற்று உட்புகாத வண்ணம் தேக்கிக் கொள்வார்கள். அவற்றிலிருந்து வேண்டியவர்களுக்குக் குழாய்களின் மூலம் அல்லது சிறுசிறு எக்குக் கலன்களில் கொடுப்பார்கள். இந்தவாயு மிகநல்ல எரிபொருள். இயற்கையாகக் கிடைக்கும் இடங்களில் இதன் விலை மலிவு. இது அதிக சூடும் கொடுக்கிறது. இதைச் சிக்கனமாகச் செலவிடலாம்.

மின்சாரமும் சமையல்செய்ய உதவுகிறது. மின்சாரம் மிகஅதிகமான சூட்டைக் கொடுக்கக்கூடியது. இதைக் கொண்டு உருக்கு உலைகளையும் எரிக்கின்றனர். மின்சார அடுப்புக்குச் செலவு அதிகமாகும். சில இடங்களில் மிகவும் குறைந்த செலவில் மின்சாரம் உற்பத்தியாகிறது. அதனால் அமெரிக்கா போன்ற சில நாடுகளில் மின்சாரத்தையே எரிபொருளாகப் பெருமளவு பயன்படுத்தி வருகிறார்கள். பார்க்க : ஆல்கஹால்; இயற்கை வாயு: பெட்ரோலியம்.

எரிமலை

எரிமலை: சில மலைகளின் உச்சியிலிருந்து சில சமயங்களில் நெருப்பும், புகையும், சாம்பலும், கற்களும், உருகிய பாறைக்குழம்பும் திடீரென வெளிப்படுவது உண்டு. இத்தகைய மலைகளுக்கு எரிமலை என்று பெயர். எரிமலைகள் உலகில் பல இடங்களில் காணப்படுகின்றன. பூமியின் உள்பகுதி நாம்வசிக்கும் மேல் பகுதியைப் போல இறுகியது அல்ல. அதன் உள்பகுதி வெப்பமாக இருக்கும். மையப்பகுதி கொதிக்கும் குழம்பாகவே இருக்கும். இந்தப் பாறைக் குழம்பு சில இடங்களில் தரைக்கு அடியில் 30 கிலோ மீட்டர் ஆழத்திலுங்கூட இருக்கிறது. இக்குழம்பில் நீராவியும், பலவித வாயுக்களும் கலந்திருக்கும். அதிக வெப்பத்தால் இப்பாறைக் குழம்பை மூடியிருக்கும் பாறை அப்போது உருகிவிடும். வாயுக்களின் அழுத்தத்தால் பாறைக்குழம்பு உயர எழும். மென்மையான மேற்பரப்பு உள்ள இடத்தில் அது தரையைப் பிளந்து கொண்டு வெளியேறும்.

வெளிவரும் குழம்பானது வெடிப்பின் வாயைச்சுற்றிலும் வழிந்து இறுகிக் கூம்பிய மலைபோலாகிறது. குழம்பு மேலும்மேலும் வெளிப்பட்டு இறுகும்போது மலை உயர்கிறது. ஈக்வடார் (த.க.) என்னும் நாட்டில் இவ்வாறு வளர்ந்த ஓர் எரிமலையின் உயரம் 6,000 மீட்டர் ஆகும். எரி-