பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 2.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

எலி 61


எல்லோராவிலுள்ள இரண்டு குகைகளின் தோற்றம்

கூட மன்னரான இரண்டாம் கிருஷ்ணர் என்பவர். இவர் கி.பி. 8ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். இக்குகையில் உள்ள சிலைகள் மிகவும் பெரியவை; உடற்கட்டும் வனப்பும் வாய்ந்தவை. இவற்றின் தோற்றத்தில் தெய்விகக் களையைக் காணலாம். கைலை மலையைத் தூக்கும் இராவணனின் சிற்பம் மிகவும் அழகாக உள்ளது. முப்புரங்களை எரிக்கும் சிவபெருமான், கங்கையைச் சடையில் தாங்கியுள்ள சிவபெருமான், கருடன் மேல் அமர்ந்துள்ள திருமால் ஆகிய வடிவங்களின் சிற்ப அமைப்பு கண்கொள்ளாக் காட்சியாகும்.

எலி: வீடுகளிலும், வயல்களிலும் வளை தோண்டி வாழும் ஒரு சிறு பிராணி எலி. இது தன் இரையைக் கொறித்துத் தின்னும். சுண்டெலியும், பெருச்சாளியும் எலி இனத்தைச் சேர்ந்தவையே. எலிமயிர் மெத்தென்றிருக்கும். பண்டையத் தமிழர் எலிமயிரினால் அழகிய துணிகள் நெய்தார்களாம்.

எல்லா நாடுகளிலும் எலிகள் உயிர் வாழ்கின்றன. இந்தியாவில் மட்டும் சுமார் 2,400 கோடி எலிகள் உள்ளனவாம்! இவை நமக்குக் கொடுக்கும் தொல்லைக்கு எல்லையே இல்லை. வீட்டு எலிகள் உணவுப்பொருள்கள், துணிகள், புத்தகங்கள் இவற்றை எல்லாம் தின்றுவிடும். வயல் எலிகள் பயிர்களை நாசமாக்கும். ஒவ்வோர் ஆண்டிலும் உலகம் முழுவதிலும் எலிகள் தின்று அழிக்கும் உணவுப் பொருள்களின் மதிப்பு பல கோடி ரூபாய்கள் இருக்கும் என்று மதிப்பிடுகிறார்கள். அமெரிக்காவில் மட்டும் ஓராண்டில் 140கோடி ரூபாய் மதிப்புள்ள உணவுப் பொருள்களை எலிகள் தின்றுவிடுகின்றனவாம். சில எலிகள் கடித்தால் இரைப்பு முதலிய நோய்கள் உண்டாகும். பிளேகு (த.க.) என்னும் கொடிய கொள்ளை நோய்க்குக் காரணமாகும் தெள்ளுப் பூச்சிகள் பரவுவது எலிகளால்தான். எனவே எலிகளை ஒழிப்பது அவசியமாகும். அவை பிறந்து வெகுவேகமாக வளர்ந்து பெருகுகின்றன.

எலிகளைப் பிடிப்பதற்குக் கூடுகளும், பொறிகளும் உள்ளன. எலிகளை நஞ்சிட்டுக் கொல்லுவதுமுண்டு. வளைகளில் புகையடித்து எலிகளை அழிப்பது மற்றெருமுறை. பெரிய தானியக் களஞ்சியங்களிலும், கடைகளிலும் நச்சுவாயுவைச் செலுத்தி எலிகளைக் கொல்லுவார்கள். பாம்பு, பருந்து, ஆந்தை, காக்கை, பூனை, நாய், நரி-

வீட்டு எலி வெள்ளெலி