பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 2.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

குழந்தைகள் கலைக்களஞ்சியம்


இந்து மதம்: உலகத்தில் இப்போது மக்கள் பின்பற்றி வரும் பல மதங்களுள் இந்து மதமும் ஒன்று. இது மிகவும் பழமையானது. எப்பொழுது இதுதோன்றியது என்று திட்டமாகக் கூறமுடியாது. யாரால் இது தோற்றுவிக்கப்பட்டது என்றும் சொல்லுவதற்கில்லை. இந்து மதத்தில் பல உள்பிரிவுகள் உண்டு. அவற்றுள் சைவமும், வைணவமும் முக்கியமானவை. சக்தியை வழிபடுபவர்கள், முருகக் கடவுளை வழிபடுபவர்கள், கணபதியை வழிபடுபவர்கள் ஆகியவர்களும் இந்து மதத்தில் உண்டு. வேதங்களின் சாரமாகிய வேதாந்தக் கொள்கையின்படி சிவன், விஷ்ணு போன்ற தெய்வங்கள் ஒரே பரம்பொருளின் வெவ்வேறு வடிவங்கள் ஆவர். இக்கொள்கைக்கு அத்வைதம் என்று பெயர். கடவுளே எல்லா உயிர்களாகவும், பொருள்களாகவும் விளங்குகிறார் என்பது இக்கொள்கையின் அடிப்படையாகும்.

இந்திய மக்களில் 84% பேர் இந்துக்கள். நேப்பாள நாட்டிலும் பெரும்பான்மையாக இந்துக்கள் வாழ்கின்றனர். பாக்கிஸ்தான், பர்மா, இலங்கை, தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர், இந்தோனீசியா, பீஜித் தீவுகள், மேற்கிந்தியத் தீவுகள், -

காஞ்சீபுரம் வரதராஜப் பெருமாள் கோயில்

சிதம்பரம் - நடராஜர் கோயில்