பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 2.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

68 எறும்பு - எறும்பு தின்னி


[உணர் இழைகளின் மூலம் எறும்புகள் ஒன்றோடு ஒன்று பேசிக்கொள்கின்றன.]

[தேன் குடித்து வாழும் ஒருவகை எறும்பு]

[அசுகுணி என்னும் ஒருவகைப் பூச்சி சுரக்கும் இனிப் பான நீரை எறும்பு குடிக்கிறது. இப் பூச்சிகளை எறும்புகள் உணவு கொடுத்து வளர்க்கின்றன.]

இரண்டு உள்ளன. இவற்றால் நன்றாகப் பார்க்க இயலாது. ஆனால் எறும்பு தன் உணர் இழைகளால் மோப்பம் பிடித்து வழியை அறிந்துகொள்கிறது. இந்த உணர் இழைகளின் மூலம் எறும்புகள் ஒன்றோடு ஒன்று பேசிக்கொள்கின்றன. வேலைக்கார எறும்புக்கு இரண்டு இரைப்பைகள் உண்டு. ஒரு பையில் தனக்குத் தேவையான உணவை நிறைத்து வைத்துக் கொள்கிறது. மற்றொரு பையில் உணவை நிரப்பிக் கொண்டுவந்து குஞ்சுகளுக்கு ஊட்டுகிறது. எறும்புகளுக்குத் தாடைகள் உண்டு. சிற்றெறும்பு, கட்டெறும்பு, முசிறு எறும்பு முதலியவை நம்மைத் தாடைகளால் கடிக்கும். வீடுகளில் காணப்படும் கருப்பு எறும்பு கடிக்காது.

எறும்புகள் பெரும்பாலும் பூமிக்கு அடியில்தான் கூடுகளைக் கட்டுகின்றன. சில வகை எறும்புகள் மரத்திலும் கூடுகட்டும். அக்கூடுகள் எங்கு இருந்தாலும் ஒழுங்காக அமைந்திருக்கும். ராணி எறும்பு தங்குவதற்குத் தனியாக ஓர் அறை உண்டு; மற்ற எறும்புகளுக்குத் தனித்தனி இடம் உண்டு; குஞ்சுகள் வளரத் தனிஇடங்கள், உணவு சேமித்து வைக்கப் பண்டகசாலைகள் ஆகியவை தனித்தனியாக உண்டு.

அசுகுணி என்னும் ஒருவகைப் பூச்சியை எறும்புகள் கொண்டுவந்து அதற்கு உணவு கொடுத்து நன்றாக வளர்க்கும். கொழுத்து வளர்ந்த அசுகுணியை எறும்பு தொடும்போது அதிலிருந்து இனிப்பான நீர் சுரக்கும். அதனை எறும்பு குடிக்கும். பால் தரும் பசுவாக அப்பூச்சி உதவுகிறது.

[கூட்டினுள் எறும்பு முட்டைகள் நன்கு பாதுகாக்கப்படுகின்றன.]

அதை அடைத்து வைக்கவும் எறும்பு வளைகளில் தொழுவங்கள் உண்டு. சில எறும்புகள் தோட்டங்களையும் வளர்க்கின்றன! எறும்பு இலைகளை மென்று பிறகு வெளியே உமிழ்ந்து ஓர் அறையில் பரப்பி வைக்கும்; சில நாளில் அந்த இலையின்மீது பூஞ்சக் காளான் வளரும். அதனை எறும்புகள் உணவாகத் தின்கின்றன. இனிப்புப் பண்டங்களும் இறந்த சிறு புழு பூச்சிகளும் எறும்பின் உணவாகும்.

எறும்பு தின்னி ( Ant-eater ) : எறும்பையே தின்று பிழைக்கும் விலங்குகள் உண்டு. இவற்றுக்கு எறும்பு தின்னிகள் என்று பெயர், எறும்பைத் தின்பதற்கு ஏற்றவாறு இவற்றின் உடல் உறுப்புகள் அமைந்துள்ளன. இவற்றின் முன்கால்களில் உறுதியான நகங்கள் இருக்கும். இவ்விலங்குகள் எறும்பு வளைகளையும், கறையான் புற்றுகளையும் கால் நகங்களால் சிதைக்கின்றன. இவ்விலங்குகளின் நாக்கு மிகவும் நீளமாக இருக்கும். அதில் ஒருவித பசையும் உண்டு. எறும்புகளை நாக்கினால் ஒற்றி எடுத்துத்தின்ன இப்பசை உதவுகிறது.

எறும்பு தின்னிகளுள் மிகவும் பெரியது எறும்புக் கரடி. இது மத்திய அமெரிக்காவிலும், தென் அமெரிக்காவிலும் காணப்படுகிறது. இது குட்டி போட்டுப் பாலூட்டும் ஒரு விலங்கு. இதற்குப் பற்கள் இல்லை. இதன் முகம் குழாயைப் போல நீண்டு இருக்கும். இதன் நாக்கு மிகவும் நீளமானது. இது எறும்புப் புற்றுக்குள்-