பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 2.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

எறும்பு தின்னி

நாக்கை நீட்டி எறும்பை ஒற்றி எடுத்துத் தின்னும். இவ்விலங்கின் நீளம் வால் உள்பட 2 மீட்டர் இருக்கும். உடல் முழுவதும் மயிர் அடர்ந்திருக்கும். இரவில்தான் இது இரை தேடும். இது பகல் முழுவதும் தனது நீண்ட வாலைத் தன் உடல்மீது சுருட்டிக் கொண்டு பந்துபோலச் சுருண்டு படுத்துத்தூங்கும்.

ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் அழுங்கு என்ற எறும்பு தின்னி வாழ்கிறது. இதற்குப் பற்கள் இல்லை. இதன் உடல் முழுவதும் தடித்த செதில்கள் உண்டு. பகை விலங்குகளைக் கண்டால் இது தன் வாலைப் பந்துபோல் சுருட்டிக்கொள்ளும். இதன் செதில்கள் சிலிர்த்துக்கொள்ளும். எறும்புக் கரடி போலவே இதுவும் இரவில் இரை தேடுகிறது.

ஆஸ்திரேலியாவிலும் டாஸ்மேனியா தீவிலும் எக்கிட்னா என்ற எறும்பு தின்னி உயிர் வாழ்கிறது. இதுவும் ஒரு பாலூட்டி தான். ஆனால் இது முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும். குஞ்சுக்குப் பாலூட்டும். இதன் உடல் முழுவதும் கடினமான முட்கள் உண்டு. இந்த விலங்குக்கும் பற்கள் இல்லை. மற்ற எறும்பு தின்னிகளைப்போலவே இதற்கும் நீண்ட நாக்கு உண்டு. நாக்கில் உள்ள பசையினால் இது எறும்புகளை ஒற்றித்தின்னும். எறும்பு தின்னிகளில் ஒன்றான அர்த்வர்க் பற்றித் தனிக் கட்டுரை உள்ளது.

அர்த்வர்க் எறும்புக்கரடி. இது எறும்பு தின்னிகளுள் மிகவும் பெரியது. ஓர் எஸ்கிமோ குடும்பம். பின்னால் இருப்பது அவர்களுடைய பனிக்கட்டி வீடு.


எஸ்கிமோ: அமெரிக்காக், கண்டத்தின் வட பகுதியில் வாழும் ஆதிக்குடிகள் எஸ்கிமோ எனப்படுவர். வட துருவத்தை அடுத்துள்ள கிரீன்லாந்து, சைபீரியா ஆகிய பகுதிகளிலும் இவர்கள் வாழ்கின்றனர். இப்பகுதிகளில் பனியும் குளிரும் மிக அதிகம்; பயிர் எதுவும் வளர்வது இல்லை. எனவே எஸ்கிமோக்கள் மீன் பிடித்தும், சீல், வால்ரஸ், திமிங்கலம், பனிமான் முதலிய பிராணிகளை வேட்டையாடியும் வாழ்கின்றனர். சீல் என்ற பிராணியின் தோலிலிருந்து உடைகளையும், காலணிகளையும் தயாரித்துக் கொள்கிறார்கள். அதன் கொழுப்பை விளக்கு எரிக்கவும். சமையலுக்கும் பயன்படுத்துகிறார்கள். உடைகளைத் தைப்பதற்கு வால்ரஸ் தந்தத்தினால் மெல்லிய ஊசிகளைச் செய்து கொள்வர். குடும்பத்திற்கு வேண்டிய உடைகளைப் பெண்களே தைக்கின்றனர்.

எஸ்கிமோக்களின் வீடு விநோதமானது. வெண்பனிக் கட்டிகளைச் சதுரம் சதுரமாக உடைத்து வீடு கட்டிக்கொள் கிறர்கள். கோடைகாலத்தில் இவ்வீடுகள் உருகிவிடும். அப்போது பிராணிகளின் தோலினால் குடிசைகள் கட்டிக்கொள்வார்கள். இவர்கள் நாய்களை வளர்க்கிறார்கள். இவை குளிர்காலத்தில் ஸ்லெட்ஜ் என்னும் பனிச்சறுக்கு வண்டியை இழுக்கின்றன; கோடையில் பொதி சுமக்கின்றன.

நாடோடிகளான எஸ்கிமோக்களின் வாழ்க்கை இப்போது சிறிது சிறிதாக மாறிவருகிறது. வட அமெரிக்காவிலுள்ள அலாஸ்க்காவிலும் கிரீன்லாந்து நாட்டிலும் வாழ்வோருள் பெரும்பாலோர் இப்போது கற்கள், மரம் ஆகியவற்றாலான நிலையான வீடுகளில் வசிக்கிறார்கள்.