பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 2.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

86 ஒலிம்ப்பிக் ஆட்டங்கள் - ஒலிவ மரம்

முறை நடந்துவந்தது. கி.பி. 394-ல் ரோம் மன்னர் இவ்விழாவைத் தடை செய்தார். அதுமுதல் 1,500 ஆண்டுகள் வரை இவ்விழா நடைபெறாமல் நின்றுவிட்டது.

ஒலிம்ப்பிக் ஆட்டங்கள் நடைபெற்று வந்த பண்டைக்கால விளையாட்டு அரங்கு ஒன்றை 1878-ல் தொல்பொருள் ஆய்வாளர்கள் அகழ்ந்து எடுத்தார்கள். அதையடுத்து ஒலிம்ப்பிக் ஆட்டங்களை மீண்டும் புதுப்பிக்க வேண்டும் என்று ஓர் இயக்கம் தோன்றியது. 1894-ல் சர்வதேச மாநாடு ஒன்று நடந்தது. இதில் சர்வதேச ஒலிம்ப்பிக் ஆட்டக்குழு அமைக்கப்பட்டது. இக்கால ஒலிம்ப்பிக் ஆட்டத்தின் முதல் விழா 1896-ல் கிரேக்க நாட்டிலுள்ள ஆதன்ஸ் நகரில் நடத்தப்பட்டது. அது முதல் வெவ்வேறு நாடுகளில், நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒலிம்ப்பிக் ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இடையில் இரு உலக யுத்தங்கள் நடந்து கொண்டிருந்தபோது மட்டும் (1914-18, 1939-45) ஒலிம்ப்பிக் ஆட்டங்கள் நடைபெறவில்லை.

ஒலிம்ப்பிக் ஆட்ட மத்தியக் குழு ஒன்று உள்ளது. இதில் எல்லா நாடுகளும் உறுப்பாக உள்ளன. ஒவ்வொரு நாட்டிலும் தேசீய ஒலிம்ப்பிக் கழகமும், ஒலிம்ப்பிக் ஆட்டக் குழுவும் உண்டு. தேசீய ஒலிம்ப்பிக் கழகம் உள்நாட்டில் ஒலிம்ப்பிக் விழாவை நடத்துகிறது; மேலும் சர்வதேச ஒலிம்ப்பிக் ஆட்ட விழாவிற்குத் தன் நாட்டு ஆட்டக்காரர்களைத் தேர்ந்தெடுத்து அனுப்புகிறது.

படம்:ஒலிம்ப்பிக் ஒளிப்பந்தம் [ஒலிம்ப்பிக் ஒளிப்பந்தம். கிரீஸ் நாட்டில் மௌன்ட் ஒலிம்ப்பஸ் என்னுமிடத்தில் சூரியனின் கதிர்களால் இது ஏற்றப்படுகிறது. பின்னர் இப்பந்தம் ஒலிம்ப்பிக் ஆட்டங்கள் நடைபெறும் இடத்திற்குக் கால் நடையாகவே கொண்டுசெல்லப்படுகிறது. ஒருவர் மாற்றி ஒருவராகப் பலர் தொடர்ந்து ஓடிக்கொண்டே இதை எடுத்துச் செல்வர்.]


ஒலிம்ப்பிக் ஆட்டங்கள் நடந்த இடங்கள்

ஆண்டு இடம்
1896 ஆதன்ஸ் (கிரீஸ்)
1900 பாரிஸ் (பிரான்ஸ்)
1904 செயின்ட் லூயி (அ.ஐ.நா.)
1908 லண்டன் (பிரிட்டன்)
1912 ஸ்டாக்ஹோம் (சுவீடன்)
1920 ஆன்ட்வெப் (பெல்ஜியம்)
1924 பாரிஸ்
1928 ஆம்ஸ்டர்டாம் (ஹாலந்து)
1932 லாஸ் ஆஞ்சலிஸ் (அ. ஐ.நா.)
1936 பெர்லின் (ஜெர்மனி)
1948 லண்டன்
1952 ஹெல்சின்க்கி (பின்லாந்து)
1956 மெல்போர்ன் (ஆஸ்திரேலியா)
1960 ரோம் (இத்தாலி)
1964 டோக்கியோ (ஜப்பான்)
1968 மெக்சிக்கோ (மெக்சிக்கோ)

1916, 1940, 1944 ஆகிய ஆண்டுகளில் ஒலிம்ப்பிக் ஆட்டங்கள் நடைபெறவில்லை.

இக்கால ஒலிம்ப்பிக் ஆட்ட விழாவில் ஓட்டம், தாண்டுதல் முதலிய கள விளையாட்டுகளுடன், நீந்துதல், குதிரையேற்றம், சிலம்பம், கத்திச் சண்டை, துப்பாக்கி சுடுதல், சைக்கிள் ஓட்டுதல், படகு ஓட்டுதல், பளு தூக்குதல், ஈட்டி எறிதல், கால்பந்து, கூடைப்பந்து, ஹாக்கி முதலிய பல வகையான பந்தயங்களும் நடைபெறுகின்றன. 1928 முதல் பெண்களுக்காகவும் பந்தயங்கள் நடத்தப்படுகின்றன. ஒலிம்பிக் ஆட்ட விழாவில் சமயம், வகுப்பு, இனம், நிறம் ஆகியவற்றைப் போன்ற வேறுபாடுகள் எதுவுமின்றி எல்லா நாட்டவர்களும் கலந்துகொள்கின்றனர். விழாத் தொடக்கத்தில் ஆதிகாலத்தைப் போன்று பலியிடும் வழக்கமில்லை; பதிலாக ஒலிம்ப்பிக் ஒளிவிழா நடைபெறுகிறது.


ஒலிவ மரம்: மக்களுக்கு மிகவும் பயன்தரும் மரங்களுள் ஒலிவமரமும் ஒன்று. இது ஐரோப்பாவில் ஸ்பெயின், இத்தாலி, கிரீஸ், போர்ச்சுகல், துருக்கி ஆகிய நாடுகளில் செழித்து வளருகிறது. மிதமான வெப்பமும் சத்துள்ள மண்ணும் உள்ள இடத்தில் இது ஓங்கி வளரும். எரிமலைச் சாம்பல் படிந்திருக்கும் நிலம் இதற்கு மிகவும் ஏற்றது. ஒளிவ மரத்தில் பல இனங்கள் உண்டு. ஒரு மரத்தின் கிளைகளை வெட்டிப் பதி போட்டுப் புதிய மரங்களைப் பயிர் செய்வார்கள். ஒலிவ மரத்தின் பூ சிறியது; பூ வெண்மையானது; மணம் உள்ளது. இதன் காய் உருண்டையாகவோ, சற்று நீளமாகவோ இருக்கும். பழுத்தால் நீலமாக மாறும். காய் சிறிது கைக்கும். அதை-