பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 7.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஊர்திகளில் தாம் பயணம் செய்கிறோம். தொலைநோக்கி, வெப்பமானி போன்ற பல கருவிகளை நாம் பயன்படுத்துகிறோம். தொழிற்சாலைகனில் பலவகை எந்திரங்கள் இன்று பயன்படுகின்றன. குண்டூசி, நீக் குச்சி போன்ற மிகச் சிறிய பொருள்களும் நமக்கு உதவுகின்றன. சில நூறு ஆண்டு களுக்கு முன்பு இவற்றில் எதுவுமே இவ்வுலகில் இல்லை. மனிதன் தன் அறிவைப் பயன்படுத்தி அவ்வப்போது இவற்றைப் புதிதாக அமைத்தான். இவை புத்தமைப்புகள் ஆகும். புத்தமைப்பு தேவையின்பொருட்டே கள் உருவாகின்றன. பண்டைக்கால மனிதன் தன் உணவுக்காக விலங்குகளை வேட்டையாடவேண்டியிருந்தது. விலங்கு களைத் தாக்க அவன் மரம், கல், எலும்பு முதலியவற்றால் ஈட்டி, அம்பு போன்ற கருவிகளைச் செய்துகொண்டான். இவை யும் புத்தமைப்புகளே. ஏற்கெனவே உள்ள பொருள்களைப் பயன்படுத்தி, ஒரு கருவி, சாதனம் அல்லது எந்திரம் போன்ற வற்றைப் புதிதாக அமைப்பதுதான் புத்தமைப்பு. சென்ற 150 ஆண்டுகளில் முக்கியமான பல கருவிகளும் சாதனங்களும் எந்திரங் கம் அமைக்கப்பட்டுள்ளன. இவை மனிதனின் வாழ்க்கை முறையைப் பெரு மளவில் மாற்றிவிட்டன. செய்தித் தொடர்பு விரைவாக நடைபெறுவதற்குத் தந்தி, தொலைபேசி, வானொலி, தொலைக் காட்சி முதலிய புத்தமைப்புகள் இன்று உதவுகின்றன. இவ்வாறே தொழில்கள், போக்குவரத்து, வேளாண்மை, மருத்து வம் முதலிய பல துறைகளில் புத்தமைப்பு கள் தோன்றியிருக்கின்றன. மேலும் பல புத்தமைப்புகள் தோன்றுவதற்கும் ஏற்கெனலே உள்ள புத்தமைப்புகள் உதவி வருகின்றன. புத்தமைப்புகள் சிலவற்றையும், அவற்றை உருவாக்கிய புத்தமைப்பாளர் களின் பெயர்களையும், அவை உருவாக்கப் பட்ட ஆண்டுகளையும் அட்டவணையில் காணலாம். முக்கியமான புத்தமைப்புகள் பற்றியும், புத்தமைப்பாளர்கள் பற்றியும் தனிக் கட்டுரைகள் உண்டு. புத்தர் (கி.மு. 563 - கி.மு. 483): உலகிலுள்ள முக்கிய மதங்களுள் பௌத்த மதமும் (த.க.) ஒன்று. இம்மதத்தை நிறுவியவர் புத்தர், இம்மதம் இவருடைய பெயராலேயே வழங்குகிறது. சுமார் இன்றைய நேப்பாள நாடு 2,500 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியா வின் ஒரு பகுதியாக இருந்துவந்தது. அங்குக் கபிலவாஸ்து என்னுமிடத்தை புத்தர் புத்தர் 13 கத்தோதனர் என்னும் குறுநில மன்னர் ஆண்டுவந்தார். அவருக்கும். அரசி மகா மாயாவுக்கும் மகனாகப் பிறந்தவர் புத்தர். இவருடைய இயற்பெயர் சித்தார்த்தர், இவர் பிறந்தவுடன், எதிர்காலத்தில் இவர் ஒரு பேரரசராகவோ, ஒரு துறவியாகவோ ஆவார் என்று புரோகிதர்கள் கூறினார்கள். இவர் துறவியாவதை சுத்தோதனர் விரும்பவில்லை. அதனால், ஒரு தனி அரண் மனையில் வெளி உலகத் துன்பங்களை அறியாதவாறு, எல்லாவித இன்ப நலன் களுடன் மிகவும் செல்வமாகச் சித்தார்த் தர் வளர்வதற்கு ஏற்பாடு செய்தார். பத்தொன்பதாம் வயதில் யசோதரை என்ற இளவரசியை இவருக்கு மணம் முடித்துவைத்தனர். இவர்களுக்கு ராகு லன் என்ற மகன் பிறந்தார். சித்தார்த்தர் தம் 29ஆம் வயதில் உலகின் துன்ப வாழ்வை நேரில் காண நேர்ந்தது.நோயும், வறுமையும்,மூப்பும், பசியும், சாவும் மக்களை வாட்டுவதைக் கண்டார். இத்துன்பங்களைப் போக்குவதற் கான வழியைக் காண உறுதிகொண்டார். அரசனுக்குரிய இன்பவாழ்வையும், மனைவி மகனையும் துறந்து காட்டிற்குச் சென்றார். பலவகை நோன்புகள் இருந்து கடுந்தவம்