பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 7.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

14 புதுச்சேரி - புதைமணல் புரிந்தார். இறுதியில் பீகார் மாநிலத்தில் புத்த கயா என இன்று அழைக்கப்படும் இடத்தில் ஓர் அரச மரத்தடியில் இவருக்கு அறிவொளி உண்டாயிற்று. அன்றுமுதல் புத்தர் ஆனார். புத்தர் என்றால் ஞானி என்று பொருள். து புத்தர் தாம் உணர்ந்த உண்மைகளை 45 ஆண்டுக்காலம் ஊர் ஊராகச் சென்று நாடெங்கும் போதித்தார். 'உலகிலுள்ள ன்பங்களுக்கெல்லாம் அடிப்படைக் காரணம் ஆசையும் தன்னலமுமே ஆகும். இவ்விரண்டையும் விட்டொழித்தால் பெற பிறவா இன்பமாகிய பேரின்பம் லாம் என்று இவர் விளக்கினார். நல் லொழுக்கம், கொல்லாமை, திருடாமை, தூய சிந்தனை. இன்சொல் கூறல், பொய் சொல்லாமை, கள்ளுண்ணாமை, பகைமை கொள்ளாமை ஆகிய எட்டு அறநெறிகளை 80ஆம் தம் வலியுறுத்தினர். Dant வயதில் ஒரு சோலையில் தங்கியபோது, மரணம் நெருங்கியதை இவர் உணர்த் தார். இரண்டு ஆச்சா மரங்களுக்கிடையே படுக்கை அமைக்கச் செய்து. அதில் படுத் தவாறே உயிர் துறந்தார். புத்தரின் கொள்கைகள் பௌத்த மத மாக உருப்பெற்றன. ஆசியாவின் பல நாடுகளில் பௌத்த மதத்தைப் பின்பற் றும் கோடிக்கணக்கான மக்கள் இருக்கிறர் கள். புத்தரை 'ஆசியாவின் ஜோதி' என்று உலகம் போற்றுகிறது. பார்க்க : பௌத்த மதம். புதுச்சேரி (Pondicherry) : தென்னிந் தியாவின் கிழக்குக் கடற்கரையோரமாக உள்ள மாநிலம் புதுச்சேரி. இம் மாநிலத் தில் புதுச்சேரியுடன் காரைக்கால், மாஹி, ஏனாம் ஆகிய பகுதிகள் அடங்கியுள்ளன. காரைக்கால் தஞ்சாவூர் மாவட்டத்தின் எல்லையிலும், ஏனாம் ஆந்திரப் பிரதேசத் தின் எல்லையிலும், மாஹி கேரள மாநிலத் தின் எல்லையிலும் உள்ள சிறு பகுதிகள். இம்மாநிலத்தின் மொத்த பரப்பு 479 சதுர கிலோமீட்டர்; மக்கள்தொகை 4,71,347 (1971), தலைநகர் புதுச்சேரி. இது ஒரு துறைமுகப்பட்டினம். முன்காலத்தில் புதுச்சேரி தமிழகத் துடன் சேர்ந்திருந்தபோது இதற்கும் ரோம் நாட்டிற்கும் கி.பி. 200 வரை நெருங்கிய வாணிகத் தொடர்பு இருந்தது. புதுச்சேரி யில் உள்ள அரிக்கமேடு (த.சு.) என்னும் இடத்தில் நடத்திய அகழ்வாராய்ச்சியி லிருந்து இது தெளிவாகிறது. பிஜாப்பூர் சுல்தான் ஆண்ட காலத்தில் புதுச்சேரியைப் பிரெஞ்சுக்காரர் அவரிட மிருந்து பெற்றனர்; 1674 முதல் 1954 இது பிரெஞ்சுக்காரர் ஆட்சியில் இருந்துவந்தது. பின்னர் இந்திய சுதந்தர இயக்கம் புதுச்சேரிக்கும் பரவி வலுவடைத் தது. 1954 நவம்பரில் புதுச்சேரி, காரைக் கால் முதலிய பகுதிகள் இந்தியாவுடன் இணைந்தன. இப்பொழுது இந்திய அரசின் நேரடி ஆட்சியின்கீழ் இது உள்ளது. புதுச்சேரியில் நெல், வேர்க்கடலை மற்ற தானிய வகைகள் யுள்செய் பயிரா கின்றன. இங்கு மருத்துவக் கல்லூரியும், மகான் அரவிந்தருடைய ஆச்சிரமமும் உள்ளன. மகான் அரவித்தருடைய கருத்து களின் அடிப்படையில் இந்தகருக்கு அரு கில் ' ஆரோவில் (Auroville) என்ற சர்வ தேச நகரம் உருவாகியுள்ளது, நகரம் 1912-ல் புது டெல்லி: இந்தியாவின் தலை இது புது டெல்லி. பழைய டெல்லிக்குத் தெற்கே புதிதாக அமைக்கப்பட்ட நகரம். ஆங்கிலேயர் ஆட்சியில் பல ஆண்டுகள் கல்கத்தாவே இந்தியாவின் தலைநகராக இருந்தது. ஒரு புதிய தநைகரை உருவாக்கும் பொருட் டுப் புது டெல்லியை அமைத்தனர். குடியரசுத் தலைவரின் மாளிகை, நாடாளு மன்றக் கட்டடம். அரசாங்கத் தலைமைச் செய்வகங்கள், உச்ச நீதிமன்றம் முத லியன இங்கு உள்ளன. பார்க்க: டெல்லி. புதைமணல் (Quick sand) : மணலின் மேல் நாம் நடக்கலாம். குழந்தை களுக்கு மணலில் நடப்பதே ஒரு தனி இன்பமாக இருக்கும். ஆனால் புதைமணல் என்ற ஒருவகை மணலில் நடப்பது ஆபத் தானது. இதில் தப்பி வருவது அரிது து. சிக்கியவர்கள் புதைமணல் எவ்வாறு உண்டாகிறது, எங்கு உண்டாகிறது என்று பார்ப்போம். ஆற்றில் நீரோட்டத்தினால் மணல் அடித் துச் செல்லப்படுகிறது. இம்மணல் உருண்டு உருண்டு பொடிமணலாகி வழ வழப்பாக இருப்பதால் ஒன்றோடொன்று பிணையாமல் இருக்கும். ஆற்றுப்படுகையி லுள்ள களிமண் இம்மணபேத் தடுத்து நிறுத்துகிறது. இவ்வாறு சேகரிக்கப்படும் மணலுக்கும் களிமண்ணுக்குமிடையே ஆற்றுநீர் சென்று தங்கி மணலை மெல்ல மெல்லத் தூக்கி மேலே பரப்புகிறது. இந் நிலையில் அடியிலுள்ள நீர் வற்றிப்போகும் போது அவ்விடம் புதைமணல் குழியா கிறது. மேலும் இக்குழி முழுவதும் மண லால் நிரம்பியிருப்பதில்லை. எனவே, எந்த ஒரு பளுவான பொருளும் இம்மணலில் எளிதில் அமிழ்ந்துவிடும்; அமிழ்ந்த சுவடு கூடத் தெரியாது. இதன்மேல் நடக்கும் மனிதனும், மற்ற உயிரினங்களும் புதைந்து விடுவதுண்டு.