பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 7.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

புளோரின் - புற்றுநோய் ஒரு வகுப்பின் மாணவர்களை வயது வாரியாக அட்டவணைப்படுத்தினால், அதிலிருந்து அவ்வகுப்பின் சராசரி வயதை யும், எந்த வயதுப் பிரிவில் அதிக மாண வர்கள் உள்ளனர் என்பதையும் காண லாம். நாட்டின் மக்கள்தொகை போன்ற சில புள்ளிவிவரங்களை வரைபடங்களாக (Graphs, த.க.) வரையலாம். இதிலிருந்து, ஓராண்டுக்கும் மற்றோராண்டுக்குமுள்ள புள்ளிவிவரங்களை எளிதில் ஒப்பிட்டுப் பார்க்க இயலும். ஒரு நாட்டின் மக்கள் தொகை, பத்தாண்டுகளுக்கு முன் எவ்வளவு இருந்தது என்பதையும். இப்பொழுது எவ்வளவு என்பதையும், மேலும் பத்தாண்டுகள் சென்றபின் எவ்வளவு இருக்கும் என்பதையும் அறிய இந்த வரைபடங்கள் உதவும். ஒரு தொகுதி புள்ளிவிவரங்களுக்கும் மற்றொரு தொகுதி புள்ளிவிவரங்களுக்கு மிடையே உள்ள தொடர்பையும் புள்ளி வியல் மூலம் பகுத்தறியலாம். எடுத்துக் காட்டாக, இந்தியாவில் சென்றபத்தாண்டு களில் மக்கள் பயன்படுத்திய தேயிலை சர்க்கரை இவற்றின் அளவை ஒப்பிட்டுப் பார்த்தால், பயன்படுத்திய தேயிலையின் அளவு அதிகரிக்கும்பொழுது சர்க்கரையின் அளவும் அதிகமாவதையும், தேயிலையின் அளவு குறைந்தால் சர்க்கரையின் அளவும் குறைவதையும் காணலாம். எனவே, இவ்விரண்டுக்குமிடையே ஒருவகைத் தொடர்பு இருப்பதை அறியலாம். இதைப் புள்ளியியலில் "இயைபு'(Correlation) என்பர். தனித்திறமை பெற்ற கணித வல்லுதர் களைக் கொண்டு புள்ளிவிவரங்கள் சேக ரிக்கப்படுகின்றன. இவை ஒரு நாட்டின் செல்லநிலை, வாணிகம், தொழில், வேளாண்மை முதலியவை பற்றி அறிந்து கொள்வதற்கு உதவுகின்றன. அரசினருக் கும், திட்ட நிபுணர்களுக்கும் வாணிகர் களுக்கும். தொழில்துறையினருக்கும் இவை மிகவும் பயன்படுகின்றன. இவ்வாறு நாட்டின் பொருளாதார, சமூக நிலையை அறியப் புள்ளிவிவரங்கள் இன்றியமையா தளவாக இருக்கின்றன. பௌதிகம், ரசாயனம், பொறியியல். கல்வி இயல், உளவியல், மருத்துவம், இன்ஷூரன்சு முதலிய பல துறைகளிலும் புள்ளியியல் இன்று கையாளப்படுகிறது. புளோரின் (Fluorine) : வாயு நிலையி லுள்ள தனிமங்களில் (த.க.) புளோரின் ஒன்று. இது மஞ்சள் நிறமாக இருக்கும். கெட்ட நாற்றம் உடையது. ஹென்றி (Henri Moissan) முவாசான் என்ற 27 பிரெஞ்சு விஞ்ஞானி 1886-ல் இந்த வாயுவை முதன்முதலில் தயாரித்தார். ஆக்சிஜன், நைட்ரஜன் தவிரப் பெரும் பாலான தனிமங்களுடன் மிக எளிதில் வினைப்படுவதால் இந்த வாயு தனிநிலையில் காணப்படுவதில்லை. புளோர்ஸ்ப்பார் (Fluorspar). இரையோலைட் (Cryolite) ஆகிய தாதுக்களில் இது அதிக அளவில் உள்ளது. பொட்டாசியம் புலோரைடும், னஹடிரஜன் புனோரைடும் சேர்ந்த கலவையிலிருந்து மின்பகுப்பு (த.க.) முறையில் புளோரினைப் பிரிக்கிறார்கள். ரசாயனப் பொருள்களால் பாதிக்கப் படாத ஒருவகைப் பீளாஸ்ட்டிக்குகளைத் தயாரிக்க இன்று புளோரின் பயன்படு கிறது.சில சில மயக்க மருந்துகள், பூச்சி கொல்லிகள், சாயங்கள் முதலியவற்றின் தயாரிப்பிலும் புனோரின் பயன்படுகிறது. புளோரின் சிறு அளவில் சில இடங்களில் குடிதண்ணீருடன் கலக்கப்படுகிறது. புளோரின் பற்சிதைவைத் தடுக்கக் கூடிய தாகையால் பற்பசைகளில் சேர்க்கப்படு கிறது. புளோரினின் கூட்டுப்பொருள்கள் பல துறைகளில் பயனாகின்றன. ஹைடிரஜன் புளோரைடு நீரில் கரைந்து ஹைடிரோ புளோரிசு அமிலம் ஆகிறது. இது நஞ்சு மிகுந்தது. பெரும்பாலான உலோகங் களுடன் வினைப்படுகிறது. கண்ணாடியை இது அரித்துவிடும். இதைப் பிளாஸ்ட்டிக் புட்டிகளிலோ, மெழுகு பூசிய புட்டி களிலோ வைக்கிறர்கள். கண்ணாடியில் அரிச்சித்திர வேலைப்பாடுகளைச் செய்ய ஹைடிரோ புளோரிக அமிலத்தைப் பயன் படுத்துகிறார்கள். கண்ணுடிப் பொருளின் மீது முழுவதுமாக மெழுகைப் பூசி மறைத்துவிடுவார்கள். சித்திரத்தையோ எழுத்துகளையோ இந்த மெழுகின்மீது எழுதிக் கீறி எடுத்துவிடுவார்கள், பிறகு அந்தக் கண்ணாடிப் பொருளை ஹைடிரோ புளோரிக அமிலத்தில் அமிழ்த்தி எடுப் பார்கள். மெழுகு கீறி எடுக்கப்பட்ட இடங்களிலெல்லாம் கண்ணாடியை அமிலம் அரித்துவிடும். நாம் விரும்பிய உருவம் அல்லது எழுத்து மட்டும் தெரியும். வெப்பமானிகளிலும் மற்ற கண்ணாடிக் கருவிகளிலும் அளவைகளைக் குறிப்பதற்கு இம் முறையைக் கையாள்கிறர்கள். புற்றுநோய் (Cancer): பெருந் துன்பம் தரக்கூடிய கொடிய நோய்களில் ஒன்று புற்றுநோய். மனித உடல் இலட்சக்கணக்கான உயிரணுக்கள் ஒன்றுசேர்ந்து திசு உயிரணுக்களால் (த.க.) ஆனது. பல உண்டாகிறது. திசுக்கள் பல சேர்ந்து ஓர்