பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 7.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

28 புற்றுநோய் - புறவூதாக் கதிர்கள் புற்றுநோய்க்கு ரேடியம் சிகிச்சை உறுப்பு ஆகிறது. சிலருடைய உடலில் உயிரணுக்கள் இடீரென்று விரைவில் பெருகுகின்றன. இவை மற்ற உயிரணுக் களை நெருக்குவதுடன் அவற்றிலுள்ள உணவுப்பொருள்களையும் எடுத்துக் கொண்டு ஒரு கட்டியாக உருவாகின் இந்தக் கட்டி மேலும் பெரிதாகி மற்றத் திசுக்களுக்கும், உறுப்புகளுக்கும் பரவி மரணம் உண்டாக்கக்கூடும். இதுவே புற்றுநோய். றன. முக்கியமாக இரைப்பை, நுரையீரல், சுல்லீரல், நாக்கு, தொண்டை, குடல் முதலிய மென்மையான உறுப்புகளை இந்நோய் தாக்குகிறது, பொதுவாக 40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கே இந்நோய் ஏற்படுகிறது. குழந்தைகளுக்கும். இது தோன்றக்கூடும். இது தொற்றுநோயன்று. பெற்றோர்களுக்கு இந்நோய் கண்டால் அவர்களுடைய குழந்தைகளுக்கும் இந் நோய் வரும் எனக் கூறமுடியாது. மரணம் புற்றுநோய் நரம்புகளை அழுத்து வதனாஸ் தாங்கமுடியாத வலி உண்டா கிறது. எலும்பில் புற்றுநோய் தோன் றினால் சோகை ஏற்பட்டுப் புதிய இரத்த உயிரணுக்கள் உண்டாகாமல் நேரும். அரையீரலில் இந்நோய் முற்றினால் மூச்சுத் திணறியும், இரைப்பையிலோ உணவு செல்லும் குழாயிலோ தோன் றினால் உணவு உட்கொள்ள முடியா மலும் மரணம் உண்டாகும். இந்நோய் உண்டாவதற்கான காரணம் இன்னும் கண்டுபிடிக்கப்பட வில்லை. சிலருக்கு இது உண்டாகிறது; சிலருக்கு உண்டாவதில்லை. உடலில் சில பகுதிகளில் உராய்தலோ அல்லது உள்ளுறுப்புகளில் உறுத்தலோ ஏற்பட் டால் அந்தப் பகுதிகளில் புற்றுநோய் உண்டாகலாம். புகைக்கரி, தார்ப் பொருள், கதிரியக்கப் பொருள்கள் புற்று நோய் உண்டாவதற்குக் காரணமாகின் றன என்று கருதப்படுகிறது. புகை பிடிப் பதால் இந்நோய் வரக்கூடும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். புற்றுநோய் கண்டவர் பிழைக்கமாட் டார் என்று சுருதப்பட்டு வந்தது. ஆனால் ஒருவருக்கு இந்நோய் இருப்பதாகத் தொடக்கத்திலேயே கண்டுபிடித்தால் குணப்படுத்தலாம். இதற்கு ரணசிகிச்சை, எக்ஸ்-கதிர் சிகிச்சை அல்லது ரேடியம் சிகிச்சை பயனளிக்கும். புறவூதாக் கதிர்கள்(Ultra violet rays); வானவில்லை நீங்கள் பார்த்திருக்கலாம். சூரிய ஒளி மழைத்துளிகளினூடே செல் லும்பொழுது அந்த ஒளி சிதறிப் பிரிந்து ஏழு நிறங்கள் கொண்ட வானவில் உண்டாகிறது. ஒரு பட்டகத்தின் (Prism) வழியாகச் சூரிய ஒளியைச் செலுத்தினால் அது காதா, கருநீலம், நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு ஆகிய ஏழு நிறங்களாகப் பிரிந்து பட்டகத்தின் மறு புறம் விழுவதைப் பார்க்கலாம். வெண் மையாகத் தோன்றும் இந்தச் சூரிய ஒளியில் இந்த ஏழு நிறங்களும் அடங்கியுள் ளன. இதிலுள்ள ஊதாக் கதிர்கள் நம் கண்களுக்குத் தெரியும். ஆனால் தமது கண்களுக்குத் தெரியாத ஒருவகை ஊதாக் கதிர்களும் சூரியனிடமிருந்து வருகின்றன. புறவூதாக் கதிர்களைச் செயற்கையாக உண்டாக்கிக் கணைநோய்க்கும் பொதுவாக உடல்நலத்திற்கும் பயன்படுத்துகிறார்கள்.