பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 7.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

30 பூகோளம் - பூச்சிகள் பூகோளம். பூமியின் இயற்கை அமைப்பு, ஒவ்வொரு பகுதியிலும் செழிப்பாக உண்டாகும் விளைபொருள்கள் மக்கள் வாழ்க்கைக்கும், நிலம், கடல், ஆறு, சம வெளி, பள்ளத்தாக்கு, தட்பவெப்பம் முதலியவற்றிற்கும் உள்ள தொடர்பு இவற்றைத் தெரிந்துகொள்ள பூகோளம் உதவுகிறது. இன்று பூ கோளவியல் மிகவும் விரிவடைந்துள்ளது. நிலம், கடல், வாயு மண்டலம் ஆகிய இயற்கை அமைப்பு களைப் பற்றிக் கூறுவது இயற்கைப் பூகோளம் (Physical geography) எனப்படும். பூமியின் மேற்பரப்பில் காணப்படும். தாவரங்கள், விலங்கினங்கள், வாழும் மக்கள் இனம் ஆகியவை பற்றியது உயிர்ப் பூகோணம் (Bio-gengraphy) ஆகும். இயற்கைப் பூகோளத்தை மேலும் பல உன்பிரிவுகளாகப் பிரிக்கலாம். மலை, பள்ளத்தாக்கு, சமவெளி முதலிய இயற்கை அமைப்புகளை விளக்கிக்காட்ட பூகோளப் படங்களை வரைத்துள்ளனர். அட்ச ரேகை, தீர்க்க ரேகைகளைக் கொண்டு பூமியிலுள்ள ஓலிடத்தைத் திட்டவட்ட மாகக் குறிப்பிடலாம். பூமி எப்பொருள் களால் ஆனது, எவ்வகைச் சக்திகள் அவற் றைத் தாக்கிப் பல்வேறு வடிவங்களை அமைக்கின்றன,பாறையமைப்பு ஆகியவை பற்றி அறியலாம். பூமியின் வடிவம், அதன் அசைவு, அது சுழலும் வேகம், காலம் முதலிய விவரங்களைக் கணக்கிட்டுத் தெரிவித்துள்ளனர். காற்று. வெப்பம், மேகம், மழை, பனி இவைபற்றி ஆராய வானிலையியல் உதவுகிறது. இவையன்றி என்னென்ன பொருள்கள் எங்கெங்கு விளைகின்றன அல்லது உற்பத்தி யாகின்றன, அவை எந்தெந்த இடங் களுக்கு ஏற்றுமதியாகின்றன என்பதையும் அறிகிறோம். மனிதனின் சமூகச்செயல். அரசு, நாடுகளின் எல்லை, சர்வதேசப் பிரச் சினை இவை பற்றி வேறு ஒரு பிரிவு விவரிக் கிறது. பூமியின் இயற்கைச் சூழலுக்கும், மனித வாழ்க்கைக்குமுள்ள தொடர்பை இன்று விரிவாக ஆராய்ந்து வருகிறார்கள். வெல் வேறு தட்பவெப்ப நிலைக்கு ஏற்றவாறு மனிதன் தன் உணவு, உடை, உறைவிடம் முதலியவற்றை அமைத்துக்கொள்கிறான். வசதியுள்ள இடங்களில் நகரங்களை அமைத்துச் சாலைகளையும், ஆறுகளின் குறுக்கே பாலங்களையும், மலையைக் குடைந்து குடைவு வழிகளையும் அமைத் துப் போக்குவரத்து வசதிகளையும், தொலை பேசி, தந்தி மூலம் செய்தித் தொடர்பை யும் பொருக்கிக்கொள்கிறன். பூகோள அறிவு இதற்கெல்லாம் உதவுகிறது. பூகோள அறிவு நம் வாழ்க்கையில் பல வழிகளில் உதவுகிறது இவ்வாறு பல துறைகளிலும் பரவி யுள்ள பூகோள் அறிவு காலப்போக்கில் படிப்படியாக வளர்ந்து வந்துள்ளது. பண்டைக்காலத்தில் கிரேக்கர் கடல் கடந்து சென்று குடியேற்றங்களை நிறுவினர். ஸ்ட்ரேபோ (கி.மு. 63-கி.பி. 25) என்ற ரோமானியர் பூகோள நூல் ஒன்றை எழுதினார். கி.பி. 2.ஆம் நூற்றண் டின் மத்தியில் கிரேக்க வானவியல் அறிஞ ரான டாமி (த.சு.) ஒரு பூகோள நூல் எழுதி தேசப்படங்களையும் சேர்த்து வெளி யிட்டார். பல நூற்றாண்டுகளுக்கு இதுவே முக்கிய பூகோள நூலாக இருந்து வந்தது. பின்னர் நீண்டகால இடைவெளிக்குப் பின் 13ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மார்க்கோ போலோ (த.க.) என்ற இத்தாலியர் ஆசிய நாடுகளுக்குச் சென்று திரும்பினார். மீண்டும் பூகோள அறிவில் ஊக்கம் பிறந்தது. வாஸ்க்கோ ட காமா (த.க.) 15ஆம் நூற்றாண்டில் இந்நியாவுக் குப் புதிய கடல்வழியைக் கண்டுபிடித் தார். 16ஆம் நூற்றண்டில் மஜல்லன் (த.க.) பூமியை ஒரு முறை சுற்றிவந்தார். இதன் பின்னர் கி.பி. 17. 18ஆம் நூற் றாண்டுகளில் கடல் பயணங்களும், நாடாராய்ச்சிகளும் மிகுந்தன. உலகப் படம் வரையும் முறையும் முன்னேறியது. இன்று பூகோளத்தை ஒரு தனிப்பாட மாகக் கல்லூரிகளில் கற்றுக்கொடுக்கிறார். கள். இதைக் கற்றுத்தரும் முறையும் சுவை மிகுந்து விளங்குகிறது. பூச்சிகள் : தின்பண்டங்களை மொய்க் கும் ஈக்களையும், பிரலில் நம்மைக் கடித்துத் துன்புறுத்தும் கொசுக் களையும், சாரை சாரையாகக் செல்லும் எறும்புகளையும் நீங்கள் அறிவீர்கள். இவை பூச்சி இனத்தைச் சேர்ந்தவை. உலகி