பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 7.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பூச்சிகள் லுள்ள உயிரினங்களில் மிகுதியாகக் காணப்படுபவை பூச்சிகளே. இவற்றில் சுமார் பத்து லட்சம் வகைகள் உண்டு. இவற்றில் பெரும்பாலானவை! தரையில் வாழ்கின்றன. சில தண்ணீரிலும் வாழ் கின்றன. தலை, மார்பு, வயிறு என மூன்று பகுதி களாகப் பூச்சியின் உடல் அமைந்துள்ளது. ஒவ்வொரு பகுதியிலும் பல வளையக் கூறுகளைக் காணலாம். வண்டு போன்ற சில வகைப் பூச்சிகளின் மேலோடு மிக உறுதியானது. இது கைட்டின் (Chitin) என்னும் சுண்ணாம்புப் பொருளாலானது. ஆனால் கொசு, அந்துப்பூச்சி முதலிய பூச்சி களின் உடல் மென்மையாக இருக்கும். பெரும்பாலான பூச்சிகளுக்குத் தலையில் இரண்டு உணர் இழைகள் உள்ளன. சில பூச்சிகளுக்கு இவை மணத்தையும் சுவை யையும் அறியவும், கொசு, ஈ, வண்ணத் துப் பூச்சி, குளவி ஆகியவற்றிற்கு ஒளி யைக் கேட்கவும் பயன்படுகின்றன. கரப் பான் பூச்சியின் உணர் இழைகள் நூல் போல் நீண்டிருக்கும். வண்ணத்துப் பூச்சி யின் உணர் இழைகளின் நுனி தடித்திருக் கும். இவ்வாறு இவற்றின் அமைப்பு பலவிதமாக இருக்கும். பெரும்பாலான பூச்சிகளின் கண்கள் விந்தையானவை. தட்டாரப்பூச்சி, 歴 ஆகியவற்றின் கண்கள் கூட்டுக்கண்கள் (Compaand eyes). கூட்டுக்கண் என்பது ஆவி ரக்கணக்கான சிறிய கண்கள் அடங்கிய தாகும்.கூட்டுக்கண்களின் உதவியால் தலை யைத் திருப்பாமலே பூச்சிகள் பக்கவாட்டி அம், பின்புறமும் பார்க்க முடியும். குளவி யின் தலையில் கூட்டுக்கண்களுக்கு அருகில் மூன்று ஒற்றைக்கண்களும் உள்ளன. பூச்சிகள் உட்கொள்ளும் உணவுக்கு ஏற்றவாறு வாய் உறுப்புகள் அமைந் துள்ளன. சாதாரணமாக இலைகள், தளிர் கள் பூவிலுள்ள தேன், மரத் தண்டு முதலியவை பூச்சிகளின் உணவாகும். சில பூச்சிகள் வேறு பூச்சி புழுக்களையும் தின்பதுண்டு. கரப்பான் பூச்சி, வெட்டுக் கிளி, தட்டாரப்பூச்சி இவற்றின் வாயுறுப்பு கள் கடித்து உண்பதற்கும், தேனீக்களின் வாய் கடிப்பதற்கும், உறிஞ்சுவதற்கும், கொசு, மூட்டைப்பூச்சி ஆகியவற்றின் வாய் குத்திக் கீறி இரத்தத்தை உறிஞ்சு வதற்கும், வீட்டு ஈயின் வாய் நக்கி உட் கொள்வதற்கும் ஏற்றபடி அமைந் துள்ளன. பூச்சிகள் எல்லாவற்றிற்கும் மார்பின் அடிப்புறத்தில் ஆறு கால்கள் இருக் கின்றன. பாதத்தின் நுனியில் கூர்மை யான, வளைந்த சிறு நகங்கள் உள்ளன. தட்டாரம் பூச்சியின் கால்கள் பறக்கும். 31 பூச்சிகளைப் பிடிப்பதற்கு ஏற்றவாறு அமைத்திருக்கின்றன. வெட்டுக்கிளியின் பின்கால்கள் இரண்டும் நீண்டிருக்கும்; துள்ளிக் குதிப்பதற்கு இவை உதவு கின்றன. பூச்சிகளின் மார்பின் மேற் புறத்தில் இறக்கைகள் காணப்படும். இறக்கையில்லாத பூச்சிகளும் உண்டு. பூச்சிகளின் வயிற்றுப்பகுதி பெரும்பா னும் பத்து வளைய கூறுகளால் ஆனது. முழுதும் வளர்ச்சியுற்ற பெண்பூச்சிகளில் வயிற்றின் கடைசி வளையம் முட்டையிடும் கருவியாகும்; எறும்பு. தேனீ. குளவி ஆகியவற்றின் கடைசி வளையம் முட்டை யிடும் கருவியாகவும், கொட்டும் கருவி மாகவும் மாறுபட்டிருக்கும். பூச்சிகளின் மூச்சுறுப்புகள் சிறப்பான அமைப்புள்ளவை. உடலின் இரு பக்கங்களி லும் மூச்சுத்துளைகள் அமைத்திருக்கும். இவற்றின்மூலம் காற்று உள்ளே செல் கிறது. காற்றுக் குழாய் சிறிய கிளைகளாகப் பிரிந்து உடலின் பல்வேறு பகுதிகளுக்கும். காற்று பரவுவதற்கு ஏற்றவாறு இருக் கிறது. பூச்சியின் இதயம், உடலின் மேலோடுகளின் அடியில் ஒரு நீண்ட குழாய் போயிருக்கிறது. பெரும்பாலான பூச்சிகளின் வளர்ச்சி யில் நான்கு நிலைகலைக் காணலாம். முட்டை, புழு (லார்வா), கூட்டுப்புழு (பியூப்பா), முதிர்பருவம் என்பன. உதாரணமாக வண்ணத்துப்பூச்சி, பட்டுப் பூச்சி, வீட்டு ஈ ஆகியவை முட்டைகளி விருந்து புழுக்களாகி, புழுப் பருவம் கழிந்து கூட்டுப்புழுப் பருவத்தை அடைந்து, முழுவதும் உருமாறி முதிர்ந்த பூச்சியின் உருவத்தைப் பெறுகின்றன. தட்டாரப் பூச்சி, வெட்டுக்கிளி முதலியன் முட்டையிலிருந்து வெளிவந்து புழுப் பருவத்தை அடைந்ததும் முதிர்நிலையி லுள்ள பூச்சியைப் போன்று தோற்றத்தில் காணப்படும். ஆனால் இவற்றிற்கு இறக்கை கள் இருப்பதில்லை. இவை பலமுறை தோலுரித்த பின் இறக்கைகள் உண்டா கின்றன. இவற்றில் முழு உருமாற்றம் இல்லை என்று சொல்லலாம். இராம பாணப் பூச்சி முட்டையிலிருந்து வெளி வந்ததும் முதிர் நிலையிலுள்ள பூச்சி போன்றிருக்கும். அனால் இது உருவத்தில் மிகச் சிறியது. எறும்பு, தேனீக்கள் போன்ற பூச்சிகள் தனித்தனியே வாழாமல் ஆயிரக்கணக்கில் ஒன்றுசேர்ந்து ஒரே சமூகமாக வாழ் கின்றன. பூச்சி இனங்களில் எறும்பு தான் அறிவுமிக்கது. சிலவகைப் பூச்சிகள் கடிப்பதால் மனிதனுக்கு நோய்கள் வருகின்றன. சில வகைக் கொசுக்கள் கடித்தால் மலேரியா.