பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 7.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சேர்க்கை மகரந்தச் சேர்க்கை - மகாபாரதம் மகரந்தச் சேர்க்கை (Pollination): பெரும்பாலான தாவரங்கள் விதைகளி லிருந்தே முளைத்து வளர்கின்றன. தாவரங்கள் மலர்களின் உதவியால் விதை களை உண்டாக்குகின்றன. இந்த விதைகள் உண்டாவதற்கு மலர்களிலுள்ள மகரந்தம் (Pollen) என்னும் மஞ்சள் நிறமான தூளே அடிப்படையானது. மலரில் மகரந் தப் பையிலுள்ள மகரந்தத்தூள், சூல்முடி யைச் (Stigma) சேருதல் மகரந்தச் சேர்க்கை எனப்படும். மகரந்தச் இருவகைகளில் நிகழலாம். ஒரு பூவின் மகரந்தம் அதே பூவின் சூல்முடியில் அல்லது அதே செடி யிலுள்ள மற்றொரு பூவின் சூல்முடியில் விழுந்தால் அது தன்மகரந்தச் சேர்க்கை (Self-pollination) எனப்படும். பூவின் மகரந்தம் மகரந்தம் அதே இனத்தைச் சேர்ந்த வேறு செடியிலுள்ள பூவின் சூல் முடியில் விழுந்தால் அது அயல் மகரந்தச் சேர்க்கை (Cross-pollination) எனப்படும். இந்த இருவகைகளில் அயல் மகரந் தச் சேர்க்கையே சிறந்தது. இதன் விளைவாக உண்டாகும் விதைகளிலிருந்து முளைக்கும் தாவரங்கள் செழித்து வளர்ந்து நல்ல பயன்தரும். எனவே அயல் மகரந் தச் சேர்க்கை நிகழ்வதற்குச் சாதகமான பல அமைப்புகள் பூக்களில் உள்ளன. சில பூச்சியினங்கள், சில பறவைகள், காற்று. நீர் ஆகியவை அயல் மகரந்தச் சேர்க்கை ஏற்பட உதவுகின்றன. ஒரு தோட்டங்களில் தேனீக்கள், வண்டு கள், வண்ணத்துப்பூச்சிகள் ஒரு மலரின் மீது சிறிதுநேரம் அமர்ந்துவிட்டுப் பிறகு வேறு மலர்களை நாடிச் செல்வதைப் பார்த் திருப்பீர்கள். மலர்களிலுள்ள மசுரந் தமும்,பூந்தேனும் (Nectar) இவற்றிற்கு உணவாகின்றன. மலர்களிலுள்ள தேனைப் பெற இவை செல்லும்போது அவற்றின் உடற்பகுதி மகரந்தப் பைகளுடன் உராய் வதால் மகரந்தம் ஒட்டிக்கொள்கிறது. வேறொரு பூவிற்குச் செல்லும்போது மகரந்தம் அதன் சூல்முடியில் விழுந்து மகரந்தச் சேர்க்கை ஏற்படுகின்றது. இவ்வாறு பூச்சிகளை ஈர்ப்பதற்கென்றே மலர்கள் அழகிய உருவம், நிறம், மணம், பூந்தேன் முதலியவற்றைப் பெற்றுள்ளன. கல்யாணமுருங்கை, இலவு போன்ற மரங்களின் மலர்களில் காகம், மைனா, தேன்சிட்டு ஆகிய பறவைகள் தம் அலகு களால் பூந்தேனைப் பருகும்பொழுது அயல் மகரந்தச் சேர்க்கை உண்டாகிறது. காற்றின்மூலமும் அயல் மகரந்தச் சேர்க்கை ஏற்படுவதுண்டு. நெல், கம்பு. கோளம் போன்ற தானியப் பயிர்களிலும், தென்னையிலும் இவ்வாறு மகரந்தச் சூலகம் 71 மகரந்தம் சூல்முடி மகரந்தக் குழாய் சூல்றை மகரந்தத் தூள்கள் சேர்க்கை ஏற்படுகின்றது. இத்தாவரங் களின் மலர்கள் அழகிய நிறமோ, நறுமணமோ பெற்றிருப்பதில்லை. ஆனால் அவை கொத்தாக மலர்ந்து நெருங்கியிருக் ரும். மகரந்தம் இலேசாக இருக்கும். காற் றில் எளிதில் அடித்துச் செல்லப்படும். காற்றில் மிதந்துவரும் அந்த ரத்தத்தை ஏற்பதற்கு வசதியாக இப் பூக்கனின் சூல்முடிகள் நீண்டும், உரோ மங்கள் அடர்ந்தும் இருக்கின்றன. மக வேலம்பாசி, வாவிஸ்தீரியா போன்ற சில நீர்த்தாவரங்களில் நீரினால் அயல் மகரந்தச் சேர்க்கை ஏற்படுகிறது. மகரத் தம் நீரில் மிதந்து சென்று சூல்முடியை அடைகின்றது. மகாபாரதம்: உலகப் புகழ்பெற்ற பழைய இலக்கியங்கள் இந்தியாவில் பல உண்டு. அவற்றுள் முக்கியமானவை இராமாயணம் (த.க.), மகாபாரதம் இரண்டும் ஆகும். இவற்றை இதிகாசங் கள் அல்லது மகா காவியங்கள் என்றும் கூறுவார்கள். பாரதர் என்னும் மரபைச் சேர்ந்த பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கு மிடையே நடந்த பெரும்போரைப் பற்றிய கதையை மகாபாரதம் கூறுகிறது. இதை முதன்முதலில் சமஸ்கிருதத்தில் எழுதிய முனிவர். இக்காவியம் செய்யுள் (சுலோகம்) வடிவில் உள்ளது. 'என்ன துன்பம் நேர்ந்தாலும் தருமத் தைக் கைவிடாமல் நடந்தால் பேரின்பம் கைகூடும். எவ்வளவுதான் அறமும், வர் வியாச