பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 7.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

72 மகாபாரதம் பாரதப் போரில், அருச்சுனனுக்குக் கிருஷ்ணன் •பகவத் கீதை'யைப் போதித்தார். உறவினர்களுடனும் நண்பர் களுடனும் போர் செய்ய அருச்சுனன் தயங்கியபோது, கிருஷ்ணள், 'தீயவர்களை அழிப்பது அறமே' எனக் கூறி அத் தயக்கத்தைப் போக்கினார். அறிவும், ஆற்றலும் ம் இருந்தாலும், ஆண்டவனிடம் பக்தி பூண்டு, அவன் துணையைப் பெறாவிடில், அவற்றால் பயனில்லை' என்பதே மகாபாரதத்தின் உபதேசம். இதை விளக்கும் வகையிலேயே பாரதத்திலுள்ள நிகழ்ச்சிகள் சித்தரிக்கப் பட்டுள்ளன. பாண்டவர்களில் மூத்தவராகிய தருமன் அறிவில் சிறந்தவர்; அறநெறியில் நடப் பவர்; பொய் சொல்லாதவர். அவருக்கு இளையவன் பீமன் இணையற்ற பலசாலி; அருச்சுனன் வில்வித்தையில் சிறந்தவன்; சகாதேவன் சோதிடத்தில் வல்லவன்; நேர்ந்தது. நகுலன் சிறந்த வீரன். இவர்கள் ஐவரும். ஒற்றுமையாக வாழ்ந்து வாழ்ந்து வந்தார்கள். இவ்வாறு அறிவும், அறமும், ஆற்றலும் ஒருங்கே அமைந்திருந்தும் இவர்கள் பல துன்பங்களை அனுபவிக்க துரியோதனனிடம் தருமன் சூதாடித் தோற்றார்; அதனால் தம்பியருடனும், மனைவி திரௌபதியோடும் 12 ஆண்டு கள் காட்டிலும், மேலும் ஓராண்டு தலைமறைவாகவும் வசித்தார். எத்தனை துன்பங்கள் நேர்ந்தபோதும், பாண்ட வர்கள் தருமத்தைக் கைவிடவில்லை. ஆண்டவளுகிய கிருஷ்ண கிருஷ்ண பகவானிடம் பக்தி பூண்டு, அவருடைய அருளைப் பெற்றார்கள். அதனால் இறுதியில் வெற்றி பெற்றார்கள். துரியோதனன் முதலிய நூறு சகோதரர் களாகிய கெளரவர்களும் அறிவும், ஆற்ற லும் உள்ளவர்களாகவே இருந்தார்கள். விதுரர் போன்ற அறச் செல்வர்களும், துரோணர், கர்ணன் முதலிய வீரர்களும் அவர்களுக்குத் துணை புரிந்தார்கள். ஆனால் கௌரவர்கள் அறநெறி தவறினார்கள். பாண்டவர்களிடம் பொறாமை கொண்டு, அவர்களைக் கொல்லப் பல சூழ்ச்சிகளைக் கையாண்டார்கள். தருமனைச் சூதாட்டத் திற்கு அழைத்து, சகுனியின் உதவியால் வஞ்சகமாகத் தோற்கடித்து, பாண் டவரை நாட்டிலிருந்தே துரத்தினார்கள். பாண்டவர்கள், நிபந்தனையின்படிக் காட் டில் வசித்து மீண்ட பிறகும், அவர்களுக் குரிய நாட்டைக் கொடுக்க மறுத்தார்கள். பாண்டவர் சார்பில் தூதுவந்த கிருஷ்ண பகவானையும் அவமதித்து அனுப்பினார் கள். இவ்வாறு அறம் தவறியதுடன், ஆண்டவனின் கோபத்துக்கும் கௌரவர் கள் ஆளானார்கள். ஆகவே இறுதியில் தோல்வி கண்டார்கள். செயல்கள் மகாபாரதத்தில் வரும் கிருஷ்ணன் அவதாரமாக திருமாலின் விளங்கு கின்றார். தன்னிடம் பக்திகொண்டு சரணடைந்தவர்களுக்கு ஆண்டவன் குற்றேவல் செய்யவும் தயங்கமாட்டான் என்பதைக் கிருஷ்ணனின் காட்டுகின்றன. பாண்டவர்கள் வேன்லி செய்தபோது, கிருஷ்ணன் அவர்களுக்குக் குற்றேவல் புரிகின்றார். திரெளபதியைத் துச்சாதனன் துல்லுரியும்போது, அவளுக்கு ஆடைகள் வழங்கிக் காக்கின்றார். பாண்ட வருக்காகத் துரியோதனனிடம் தூது செல்கின்றார். போரில் அருச்சுனனுக்குத் தேர் ஓட்டுகின்றார். பீஷ்மர், துரோணர், கர்ணன் ஆகியோரைக் கொல்ல அருச்சுன ணுக்கும், துரியோதனனைக் கொல்ல பீமனுக்கும் வழி சொல்லிக் கொடுக்கின் றார். இவ்வாறு பாண்டவரின் தோழராக வும், அரசியல் சூழ்ச்சித் திறம் படைத்தவ ராகவும் விளங்கிப் பாண்டவர் வெற்றி பெறத் துணைபுரிகின்றார் கிருஷ்ணன். நட்புக்கும் வள்ளல்தன்மைக்கும் எடுத் துக் காட்டாகத் திகழ்கின்றான் கர்ணன். துரியோதனனிடம் அவன் ஆழ்ந்த நட்புக் கொண்டிருந்தான்; தானம் செய்வதில் தலைசிறந்து விளங்கினான். 'குந்திதேவிதான் தன் தாய்; பாண்டவர்கள் தன் சகோதரர்கள்' என்பதைத் தாயின் வாயிலாக அறிந்த பிறகும் துரியோதன னிடம் அவன் கொண்டிருந்த நட்பு மாற வில்லை. நண்பனுக்காக இறுதிவரை செஞ் சோற்றுக் கடன் கழித்து மாண்டான். அறச்செல்வனாக இருந்தும் அறந் தவறிய துரியோ தனனுடன் கூடா நட்புக் கொண்ட மையால், கர்ணன் வீழ்ச்சியடைந்தான். இன்னும் எத்தனையோ பேர் மகா பாரதத்தில் இடம் பெற்றிருக்கிறார்கள். அவர்கள் அனைவரின் வாயிலாக மனித உள்ளத்தின் வெவ்வேறு இயல்புகளையும்,