பக்கம்:கோப்பெருந்தேவியர்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 கோப்பெருந்தேவியர் நல்லிடிக்கோன் காதல் - கரூர்ப் பெருமான் திருவிழா அரங்கத்தில் ஆடல் வல்ல மருதியை முதன் முறையாகச் சந்தித்த இளவரச கிைய நல்லிடிக்கோன் அவளே மணந்துகொள்ள, வேண்டுமென நினைந்தான். அவள் நாகப்பட்டினத் திற்குத் திரும்பிச் செல்லும்போது தக்கவர்களே உடன் அனுப்பி இடைவழியில் உறையூரில் தங்குமாறு ஏற்பாடு செய்தான். அவளே ஆங்குத் தனிமையில் கண்டு தனது கருத்தைத் தெரிவிக்க விரைந்து பின் தொடர்ந்து வந்தான். அங்ங்னமே உறையூர் அடைந்த நல்லிடிக்கோன், மருதியைக் கண்டு அவளே மணம் புரிந்துகொள்ள விரும்பும் தனது எண்ணத்தை வெளி யிட்டான். அது கேட்ட மருதி திடுக்கிட்டாள். அவள் தன் சித்தத்தில் அத்தி ஒருவனுக்கே இடமுண்டு என்றும் பிறிதொருவருக்கு இடமே இல்லையென்றும் சொல்லித் தன் நகருக்குச் செல்ல விடைதருமாறு வேண்டினுள். அத்தியுடன் அரும்போர் மருதியின் மனக்கருத்தை அறிந்த அரசிளங்கோ வாகிய கல்லிடிக்கோன் ஆட்டன் அத்தியை ஒழித்தா லன்றி மருதியை அடையமுடியாது என்று கருதின்ை. அத்தியுடன் நல்லிடிக்கோன் போர் தொடுக்கச் சித்த மான்ை. உறையூரின் புறத்தே படையுடன் அவனே எதிர்த்தான். போர் கடைபெற்றுக்கொண்டிருக்கும் போதே மருதி எப்படியோ தப்பி நாகப்பட்டினத்தை நண்ணினுள். - இச் செய்திகளைத் தெரிந்த இரும்பிடர்த்தலையார், அத்திக்கு உதவியாகக் கரிகாலன் படைகளையும் அவன்