பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-நக்கீரர்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெடுநல்வாடை 95

அதன் வரவு, பல்வேறு உணவுப் பொருள்கள் விளையத் துணை புரியுமாதலின் தன்மை உடையதாயிற்று ; இக் கருத் திலுைம், அது நல்வாடை என அழைக்கப்பெற்றது எனி னும் பொருந்தும். - -

இதன்கண், கூதிர்காலக் காட்சிகளும், மாறும் தட்ப வெப்ப நிலைகளுக்கேற்ப மக்கள் தங்கள் வாழ்விடங்களேயும் வாழும் வகைகளையும் மாற்றிக்கொள்ளும் இயல்பும், தமிழ் நாட்டுப் பண்டைக்கால நாகரிகச் சிறப்பை கனிவிளக்கும் ஈகர் அமைப்புக்களும் அந் நகர்வாழ் மக்களின் செல்வ வாழ்வும், தலைவனப் பிரிந்து தனித்துத் துயர் உறும தலை வியின் துன்பகிலைகளும், நள்ளென் யாமத்தும் உறங்காது, படைவீரர்க்கு ஊக்கம் ஊட்டும் அன்புரை வழங்கிக் கொண்டு பாசறைக்கண் இருக்கும் பாண்டியன் தலையாலங் கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் இயல்பும் இனிது விளக்கப்பட்டுள்ளன.

பருவந்தோறும் பொய்யாத் பெய்யும் மேகம் புது மழை பெய்யத் தொடங்கி விட்டது; வெள்ளம் பாயும் பள்ள இடங்களில் இருப்பின், தங்கள் ஆடு மாடுகளுக்கு ஆகாது என்பதறிந்த ஆயர்கள், தங்கள் ஆனிரைகளொடு மேட்டு கிலமாகிய முல்லை நிலத்தே சென்று தங்குவாசாயி னர்; ஊருக்கு அருகே மேய்த்து ஊரிலேயே தங்கிவாழ்ந்து பழகிய அவர்கள், இனி அவ்வாறு ஊரில் வாழ்வ தற்கு இல்லேயே என்ற வருத்தம் ஒருபால் வருத்த, குளிர்க் கொடுமை ஒருபால் வருத்த வாழலாயினர். இவ்வாறு துயர்உறும் அவர்கள், பற்பறை கொட்டும் கங்கள் குளிரைப் போக்குமாறு மூட்டிய நெருப்பிலே தங்கள் கை க்ளேக் காட்டிக் காட்டிக் கன்னங்களில் வைத்துச் சூடு உண்டாக்கிக் கொண்டு ஆண்டு வாழலாயினர். விலங்கு கள் எல்லாம் குளிரின் கொடுமைக்கு அஞ்சி, மேய்தலாகிய தம் தொழிலையும் மறந்துவிட்டன; குரங்குகள், குளி ரின் கொடுமையால் உடல் குன்றித் துன்புறலாயின; மாங் களில் வாழும் பறவைகளும், குளிர்காற்ருல் அலைப்புண்டு நிலத்தே வீழ்ந்து வருந்தின; கறவைப் பசுக்கள்; பால்