பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-நக்கீரர்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 ந க் ோர்

உண்ணவரும் தம் கன்றுகளுக்கும் பால் கொடாத உதைக்

கலாயின.

பீர்க்கும் பிறவும் பூக்கத் தொடங்கின; மழையால் வருந்திய கொக்குகள், மழை சிறிது விட்டவுடனே, பறந்து சென்று, ஒடிவரும் நீரை எதிர்த்துச் செல்லும் சிறு மீன் களே நார்ைகளோடு கூடி உண்ணலாயின; பெருமழை பெய்து ஒய்ந்துவிட்டதாயினும், சிறு சிறு துவலைகள் சித றிக்கொண்டே இருந்தன. அகன்ற வயல்களில் கிறைந்த நீர்பெற்று வளம்பெற வளர்ந்த நெற்கதிர்கள் முற்றி வளையலாயின; கமுகு, நீர் நிறைந்து பருத்து முற்றிய காய் களே உடையவாயின; பூக்களால் கிறைந்து பொலிவு பெறத் தோன்றும் மாங்கள், மழை பெய்தலால் ஏற்றிக் கொண்ட நீர்த்துளிகள் இடைவிடாது விழுந்து கொண்டே யிருக் தன ; பருத்துத் திரண்ட தோள்களையும் முறுக்கேறிய உடம்பினேயும் உடைய 'மிலேச்சர்கள், மதுவை உண்டு மழைத்துளிகளுக்கும் அஞ்சாது, ஆறுபோல் அகன்ற தெருவிலே, ஆடைகளால் தம் உடலைப் போர்த்திக் கொள் ளாமலே அங்கும் இங்குமாய் அலைந்து திரிவாாாயினர்.

மேகங்களால் மறைப்புண்டு ஞாயிறு தோன்ருமையால்,

பொழுது அறிய மாட்டாமல் மயங்கிய மகளிர், மலர்கள் மனங்கமழ மலர்தலைக்கண்டு மாலைக்கால்மாயிற்று என உணர்ந்து, இரும்பால் இயன்ற விளக்கிலே நெய் வார்த்துப் பெற்ற திரிகளைக் கொளுத்தி நெல்லும் மலரும் தூவி வணங்கி, வளங்கொழிக்கும் வணிகத் தெருக்களில் மாலைக் காலத்தைக் கொண்டாடினர்; ஞாயிறு தோன்ருமையால், இரவு இது பகல் இது என அறியமாட்டாமையால், தம் பெடையோடு கூடி வெளியே சென்று இரைதேடி உண் அணுவ தொழித்து வீடுகளிலேயே வாழும் ஆண்புருக்கள், இருந்த இடத்திலேயே இருப்பதால் கடுக்கும் தம் கால் களின் வலியினை ஆற்றிக்கொள்ள கால்கள் மாறி மாறி கிற்கலாயின. - - - -

விடுகளில், அவ்விட்டில் வாழும் குறிவேல் மகளிர், குளிர் போக்கிச் குடுண்டாக்கும் கத்தாரி முதலியவற்றை