பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-நக்கீரர்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்க்கைநிலை - 9

இலன்; பிறரை உள்ளியதும் இலன்,' எனவும் கூறி யுள்ளார். இதனுல், நக்கீரரும் ஏனைய புலவர்களைப் போன்றே வறுமையால் வாடி, வழிபல கடந்து வள்ளி யோரை உள்ளிச் சென்றவராவர் என உணரலாம்: - -

நக்கீசர், மக்களோடு துவன்றி மனேயறம் காத்த மாண்புடையாளராவர் ; மங்கலம் எனப்படும் மாட்சிமிகு மனையாளையும், நன்கலம் எனப்படும் நன்மக்கட் பேற்றை யும் பெற்றவர். தந்தை மதுரைக்கணக்காயர் எனவும், மகன் ரேங்கொற்றனர் எனவும் தம்குடிவழி உரைத்த நக்கீரர், கம் சான்ருண்மை கேட்டுப் பெரிதுவக்கும் பேறு பெற்ற தாய் யார்? தம் மனைவி யார்? என்பதை அறிவித் தாால்லர். தங்தை கணக்காயனர் ஒரு போசிரியர்; தன் பால் வந்து பயின்றார் பலர்க்கும் தமிழ் அறிவித்த தகை மைசால் ஆசிரியர்; மகன் மாபெரும் புலவர்ை. இவ்வாறு, வழி வழியாகத் தமிழ்மொழிக்குத் தொண்டு செய்த தொல்குடியில் தோன்றிய வாழ்வினராவர். s நக்கீசர், சங்கறுக்கும் தொழிலுடையார் என்ப; அது பொருந்தாப் பொய்யுரை என்பது முன்னரே அறிவிக்கப் பட்டது; அவர் தம் தங்கையார் மேற்கொண்ட கணக்காயர் தொழிலுடையார் என்றும் கூறுவதற்கில்லே சங்கத் தமர்ந்து தமிழாராய்வதையே, அவர், க்ம் தொழில் என் மேற்கொண்டார் போலும் ! - - * : *