பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-நக்கீரர்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

+. பெருமை

நக்கீசர், தமிழ்ச்சங்கப் புலவர்களுள் தலைவராம் தகுதி யுடையார் என்பதும், சங்கப்புலவர்களேக் குறிப்பிடும் நூல்கள் எல்லாம் நக்ரேரை முதற்கண் கூறியே, பிறபுலவர் களைக் கூறுகின்றன என்பதும் அவர் பெருமைக்குரியன - வாகும். தொல்காப்பியம் பொருளதிகாரத்திற்கு உரை கண்ட பேராசிரியர், ' கடைச்சங்கத்தாருட் களவியற் பொருள் கண்ட கணக்காயனர் மகளுர் நக்கீசர், ’ எனப் பெயர் கூறிப்போற்றி, அவர்கள், “ புலவுத்துறந்த நோன் புடையாகலாம் பொய்கட்ருர்,” எனப் புகழ்வதாலும் நக்கீர் பெருமை நன்கு வெளியாகும். -

  • நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த, மறைமொழி தான்ே மந்திரம் என்ப.'

என்ற தொல்காப்பியம் செய்யுளியல் நூற்பா உரையில், நக்கீசர், ஒன்னுர்த்தெறலும், உவர்தாரை ஆக்கலும் வல்ல தவம் வரப்பெற்றவராவர்,” எனப் பேராசிரியர் போற்று வதும் இவர் பெருமைக்கோர் எடுத்துக்காட்டாம் சங்கத் தமர்த்து தமிழாய்த்துவரும் க்ரேர்முன், ஆரியம்வல்ல கொண்டான் என்னும் பெயருடைக் குயவன் ஒருவன் வந்து கின்று, வடமொழியை வாழ்த்தி, தமிழை இழித்துக்கூற, அதுகேட்ட நக்கீசர் ஆருச்சினம் கொண்டு, எம் தாய் மொழியை இழித்துக்கூறிய கின்னே இன்னே இறக்கும் படிச் செய்கிறேன் , என்று கூறி, .

'முரணில் பொதியில் முதற்புத்தேள் வாழி! பாண கபிலரும் வாழி! - அரணிலா . ஆனந்த வேட்கையான் வேட்கோக் குயக்கொண்டான் ஆனந்தம் சேர்கசுவா கா !” என்ற பாட்டைப்பாட, அவ்வேட்கோ, அவ்விடத்திலேயே வீழ்ந்து மாண்டான்; பின்னர் பலர்வத்து அவன் பிழை பொறுத்து உயிர்தருக’ என்று வேண்டிக்கொள்ள,