பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-நக்கீரர்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியல் உரை 77.

மாட்டாமல் வருந்திய அரசன் கவலையைப் போக்க இறைவன் களவியல் நூல் செய்களித்தான்் என்று கூறுகிறது; கிருவிளையாடல், பொருள் இல்க்கணம் அறிய மாட்டாது மயங்கிய புலவர்களுக்காகப் பொருள் நூல் செய்தளித்தான்் என்று கூறுகிறது; களவியல் இயற்றிய பொருள் இலக்கணத்தை இறைவன் செப்பேட்டில் எழுதிக் கோயிற் பீடத்தின் கீழ் வைத்தான்் என்று கூறுகிறது; திருவிளையாடல், புலவர் மாறுபாடு போக்கப் புலவர் உருக் கொண்டு வந்த இறைவன், பொருள் இலக்கணத்தை ஆக் கிப் புலவர்களிடையே கொடுத்தான்் என்று கூறுகிறது. களவியல் ஊமை உருத்திரசன்மன், மதுரை மருதன் இள நாகனர் இயற்றிய உரை கேட்டவழி ஒரோவழிக் கண்ணிர் விட்டான்; நக்கீசர் இயற்றிய உரையை உரைத்தவிடத்துப் பதந்தொறும் கண்ணிர் விட்டான் ; ஆகவே, புலவர்கள் நக்கீரர் உரையினேயே உண்மை உரை எனக் கொண்டனர். எனக் கூறுகிறது; திருவிளையாடல், உருத்திரசன்மன், நக்கீரர் கபிலர் பாணர் ஆகிய மூவர் உரை கேட்டுக் கண்ணிர் சொரிந்தான்் ; ஆகவே புலவர்கள் அம் மூவர் உரையினையும் மெய்யுரை எனக்கொண்டு போற்றினர். என்கிறது.

களவியலுக்கு உரை கண்டவர் நக்கீரர் என்பதை ஏற். மறுக் கொள்வதற்குத் தடையாய் விளங்கும் சில செய்திகள் அக் களவியல் உரையில் காணப்படுகின்றன. நக்கீரர் - சங்க காலப் புலவர்; சங்க காலம் கி. பி. இரண்டாம் நூற். ருண்டு என்பர்; ஆகவே, நக்கீரர் இரண்டாம் நூற்ருண் டைச் சேர்ந்தவராவர். களவியல் உரையில் மேற்கோள்க: ளாக வரும் செய்யுட்கள், அரிகேசரி, அரிகேசரி பராங் குசன், வரோதயன் என்ற பெயர்களேக் கொண்ட பாண்டிய அரசன் ஒருவனேயும், அவன், வல்லம், கோட்டாறு, நெல் வேலி, பர்ழி, விழிஞம் முதலிய இடங்களில் பெற்ற வெற்றி களேயும் குறிப்பிடுகின்றன; சங்க காலப் பாண்டியர் பெயர்கள் எல்லாம், அறிவுடை நம்பி, நன்மாறன், மாறன்

வழுதி, பெரும்பெயர் வழுதி, முதுகுடுமிப் பெருவழுதி.