பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பரணர்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96. பர ண ர்

ஆகிய அவ்வளவு பேரையும் வென்று ஒட்டின்ை மறு வலும், வாகை என்னுமிடத்தே, ஒன்பது அரசர்கள் அவைேடு பொருது, குடையும் முரசும் களத்தே ஒழிய, நண்பகலிலேயே தோற்ருேடினர்; இப் பெருவெற்றிகளே அல்லாமல் அவன் தமிழ் நாட்டில் ஆங்காங்கே வாழ்ந்து வந்த, ஒளியர், அருவாளர், பொதுவர், முதலியோரையும் வென்முன் , வடநாடு சென்று, வச்சிரம், மகதம், அவர் கி. முதலாய அங்காட்டு அரசர்களே வென்று அவர்கள் அளித்த அரும்பொருள் பலபெற்று, இமயத்தில் வெற்றிக் கறிகுறியாகப் புலிக்குறி பொறித்து மீண்டான்; காவிரிக்கு இருமருங்கும் கரை கட்டி நாட்டை வளம்படுத்தி, வளவன்' என்ற பெயர் பெற்ருன் ; புகார்நகரைப் புதுப்பித்துப் புறநாட்டுவாணிபம் வளர வழிசெய்து, உள்நாட்டுச் செல்வ. நிலையினைச் செழிப்புறச் செய்தான்்.தன்னைப்பாடிய புலவர், கடியலூர் உருத்திரங் கண்ணணுர்க்கும் பதினறு நாமுயிரம் பொன் பரிசளித்துப் பெருமை செய்தான்்.

இவ்வாறு, தமிழ் அரசர்களுள் தலைசிறந்தோன் எனப் பாராட்டப்பெறும் கரிகாற்ப்ெருவளத்தான்் வாழ்க்கை யில் கிகழ்ந்த அரும்பெரும் செயல்கள் மூன்றினைப்பாணர், தம் அழகிய அகநானூற்றுப் பாடல்கள் மூன்றினுள், அமைத்துப் பாராட்டியுள்ளார்.

'கொடிய சினமும், கடியவலியும் உடைய புகழ்மிக்க, கரிகால்வளவன், கள்ளுண்டு மகிழ்வோர் ஆரவாரம் மிக்க வெண்ணிவாயில் என்னுமிடத்தே தன்ன்ே எதிர்த்துப் போரிட்ட வேந்தர்இருவரும், வேளிர் பதிைெருவரும். தங்கள் வீரமுரசினேப் போர்க்களத்தே போட்டுவிட்டு கில்ே கெட்டு ஓடுமாறு வென்று, அவர்தம் வலியனைத்தையும் அழித்த அந்நாளில், அவன் ஆண்டுப்பெற்ற வெற்றி குறித்து, அவன் தாய் பிறந்த அழுந்துாரில், விழாவெடுப் போர் எழுப்பிய ஆரவாரம், அம்மம்ம! மிகப் பெரிதாம்!” எனக் கரிகாலன் வெண்ணியில் பெற்ற கன்னிப்போர்

வெற்றியினை வியந்து பாராட்டினர் ஒரு பாட்டில் :