பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பரணர்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாணராற் பாடப்பட்டவர்கள் 109.

(18) தித்தன் வெளியன் :

இவன், தித்தன், மாவண்தித்தன், கித்தன் வெளியன் என்றெல்லாம் அழைக்கப்பெறுவன் ; இவன் பெயர் தித்தன் வெளியன் என்று அழைக்கப்பெறுவதைக் கொண்டு, இவ்ன் இயற்பெயர் வெளியன் என்பது; அவன் தித்தன் என்பான் மகனுவன் என்று சிலர் கருதுவர் ; ஆனல், பரணர் ஒருவரே, பல இடங்களில் மாவண்தித்தன் உறந்தை' எனவும், கித்தன் உறங்கை எனவும், கித்தன் வெளியன் உறந்தை' எனவும் கூறியுள்ளார் ஆதலின், உறந்தைக்குரியோன் ஒருவனேக் குறிப்பிடும் இம்முத் தொடர்களும் ஒருவனேயே குறிக்கின்றன என்று கொள்ள வேண்டியுளது ஆதலின், இத்தொடரைத் தித்தன் மகன் வெளியன் என்ற பொருளுடையதாகக் கொள்வது பொருந்தாமை அறிக. Z

தித்தன் வெளியன், உறந்தையிலிருந்து ஊராண் டவன் ; உறந்தை, நொச்சிவேலியால் குழப்பெற்றது ; அந்நகரைச்சூழ அமைந்த காவற்காடு கற்களால் கிறைந்து பகைவர்க்குக்கடத்தற்கு அருமை உடையது ; அங்குகரை அடுத்து உள்ள கானலம்பெருந்துறையில் கலங்கள் பல கிறைந்திருக்கும் ; நெல்வளம் மிக்கமைகண்டு, பிண்ட நெல்லின் உறந்தை” எனவும், வெண்ணெல் வேலி உறந்தை” எனவும் புலவர் புகழ்ந்த பாராட்டுவர். இவ்வாறு வளம்பெறுதற்குக் காரணமாய காவிரியாறு, உறந்தை நகர்க்கண் ஒடக்கோலும் கிலேபெரு ஆழம் உடையதாகும். உறங்கை பெற்ற இச்சிறப்புகளுக் கெல்லாம் மேலாக, அறம் கின்றுகிலைபெறும் அவை யினேயும் உடையது என்ற உறுபுகழும் அதற்கு உண்டு. -

பெரும்புகழ்பெற்ற உறந்தையில் வாழும் பேறுபெற்ற தித்தன் வெளியன், கன்னளவிலும் புகழ்உடையனவன்; அவன் புகழ் விளக்க, அவனுக்கு அமைந்துள்ள மாவண் தித்தன் என்ற பெயரும், அவன் பெயருக்கு முன்வரும் மழைவுளம் தரூஉம்' என்ற சிறப்படையும்போதிய