பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பரணர்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 ப - ன ர்

படும் ஒருசில குறிப்புக்களேயே அவர்கள் வரலாருகக் காள்ளுதல் வேண்டும். மேலும், ஒருவர் வரலாறு என்பது, அவர் பிறந்த ஊர், காலம், வாழ்ந்த இடம், அவர் வாழ்க்கையோடு தொடர்புடைய அவர் மனைவி, மக்கள், பெற்ருர், உற்ருர், பேணிய அரசர்கள், பிற எண் பர்கள், அவர் வாழ்நாள், வாழ்நாளில் நடைபெற்ற நிகழ்ச்சி கள் இவை மட்டுமே ஆகாது; அவர்தம் குணமும், பெரு மையும், பிறவும் வரலாறு என்றே கொள்ளப்படும்.

ஆதலின், புலவர் பாடிய பாடல்களாக எட்டுத்தொகை, பத்துப்பாட்டு முதலிய பெருமால்களில் காணப்படுவன வற்றைத் துணையெனக் கொண்டு, அவர்கள் வரலாற்றை அறிய முற்படுதலே அறிவுடையோர் கடன். அவ்வாறே, பரணர் வரலாற்றினையும், அவர் பாக்கள் காட்டும் பாதை வழிச்சென்று பார்த்து மகிழ்வோமாக.