பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பரணர்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோற்றுவாய் 5

புலப் பெயனிரார் எனவும் பெயரிட்டு வழங்கி அவர்களையும் அறிமுகமாக்கினர்.

இங்கிலேயில், புலவர் வரலாற்றை அறியவிரும்பும் நமக் குப் பெரிதும் துணே புரிந்து நிற்பன, அப் புலவர்கள் இயற்றிச் சென்ற ஒருசில பாடல்களே , அப் பாடல் களும், அவர்கள் வாழ்க்கை வரலாற்றினே முழுதும் வகுத் துரைக்கும் இயல்பினவா எனின், அதுவுமில்லை. பழங் தமிழ் இலக்கிய ஆசிரியர், வரலாற்று நாலாசிரியர் (Historians) அல்லர் ; அவர்கள் புலவர்களே ; அவர்கள் தொழில் எல்லாம், தம்மைப் பேணிய பேர் அரசர்களைக் - குறு நில மன்னர்களே ப் - பிற கொடைவள்ளல்களைப் பாராட்டிக் கூறுவதே அவர் தம் வரலாற்றை வரைவது அல்ல ; தங்களைப் பேணியோரைப் பாராட்டுங் காலத் தும், அவர்கள் செய்த செயற்கரும் செயல் எல்லாவற்றை யும் எடுத்து வகுத்துக் கூறுவதைப் புலவர்கள் வழக்க மாக மேற்கொள்வதிலர். புரவலரைப் பாராட்டுங் காலத் தும், கங்கள் வறுமை, கம்மைப்போன்ற புலவர்களே மற்ற இரவலர்களேப் புரக்கவேண்டியதன் இன்றியமையாமை, புரவலர் சிலர், கம்மைப்போன்ற புலவர்களேப் பேணிய வகை ஆக இவற்றைப் பெரிய அளவில் கூறி, சிறிய அள வில், அப் புரவலர்கள் செய்த செயல் சிலவற்றைக் குறிப் பிடுவதே அப் புலவர் வழக்கமாகக் காண்கிருேம். ஆகவே, அவா பாசுகள, அககால அரசாகள வரலாறறை ஒா அளவு அறியத் தான்ே புரிகின்றனவே அன்றி, அவற்றை இயற் றிய புலவர்கள் வரலாற்றை அறியத் துணை புரிவன அல்ல. என்ருலும், அரசர்களேப்பற்றிக் கூறும்பொழுது, அவ் வரசர்களோடு, அப் புலவர்கள் கொண்டிருந்த தொடர்பு சிலவற்றையும், அப் டாக்கள் அறிவிக்கின்றன. ஆகவே, புலவர்வாழ்க்கை வரலாற்றை அறிய அவையும் ஒர் அளவு துணை புரிகின்றன என்றே கொள்ளலாம்.

ஆகவே, புராணங்கள் தனிப்பாடல் திரட்டுக்கள் போன்ற பிற்கால நூல்கள் கூறுவனவற்றைக் கொள்ளாது, அப்புலவர்கள், தம் வாயால் பாடிய பாடல்களில் காணப்