பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பரணர்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 பாணர்

ஒருசமயம்; மனேவி மறுசமயம். இப்படி வாழ்வதை அவர்கள் மனநிலை வெறுக்கவில்லை. இவ்வாறு அவரவர், அவரவர்க்கு விரும்பிய சமயத்தைச் சார்ந்திருந்ததோடு, ஒருவரே பல சமயத் தொடர்புடையாகவும் இருந்துள்ள னர்; மக்களிடையே இத்தகைய சமரச எண்ணம் சில வியது எனின், மக்களுக்கு வழிகாட்ட வேண்டியவராகிய புலவர்களிடத்தில் அவ்வெண்ணம் இருந்தது என்று

கூறுவது தேவையில்லே.

பரணர், தாம் பாடிய பாடல்களில், உலகம் புகழும் நான்மறைகளை நல்கியோன் சிவன், அவனுக்குக் கண் மூன்று உண்டு. ஞாலம் நாறும் நலங்கெழு நல்லிசைகான் மறை முதுநூல் முக்கட்செல்வன்' எனவும், அலைவாய் என அழைக்கப் பெறும் செந்திற்பதிக்குரியோன், செவ்வேள் என அழைக்கப்பெறும் முருகன், அவன் போர்வன்மை மிக்கவன்; அவனமர் அலைவாய், அழகிய மணிவிளக்கால் மாண்புறும், திருமணி விளக்கின் அலே வாய்ச் செருமிகுசேய் ' எனவும், சிவனையும் முருகனேயும் அறிந்து கூறியிருப்பதால், பரணர் சைவச் சார்புடையவர் என்பர் சிலர்; அதற்கு ஆதாரமாக, பொய்யடிமை இல்லாத புலவர்க்கும் அடியேன் ” என்று சுந்தாமூர்த்தி நாயனர் கூறிய தொடர், சங்ககாலப் புலவர்களேயே குறிக் கும் எனக் கொண்டு, நம்பியாண்டார் நம்பி அவர்களும், உமாபதி சிவாசாரியரும் நக்கீரர், கபிலர், பரணாகிய பெரும்புலவர்கள், அரன் சேவடிக்கே பொருள் அமைத்து இன்பக்கவிபாடும் புலவர்களே,” எனவும், மெய்யுடைய தொடைகள் எல்லாம் மன்றுளாடல் மேவியகோன் இரு தாளில் விரவச் சாத்தினர்,” எனவும்கூறி, பாணரைப் பாம்பரைச் சைவர் என்றே கொண்டதைக் காட்டுவர். ஆனல், பாணரோ அல்லது அவர்காலப் புலவர்களோ சைவராவர் என்பதற்கான அகச்சான்று எதையும் அவர் புருக்களில் காண இயலவில்லை. ஆதலாலும், பரணர் குறிப் பிட்ட அவ்விரு குறிப்புக்களும், சிவன் இருந்த ஒரு

தறையினையும், முருகன்முன் தலைமகன் உரைத்த குளுற