பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பரணர்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிறப்பு, குலம், சமயம் - 13,

வினேயும் குறிக்க வந்தனவே அன்றி, அவர்கள், பாணர் வணங்கும் வழிபடு கடவுளாவர் என்பதை உணர்த்த வந்தன அல்ல ஆதலாலும், தம் காலவரலாற்று நிகழ்ச்சி களைப் பிழையின்றி வகுத்துக் கூறவல்ல சேக்கிழார், சுந்தரமூர்த்திநாயனர் பாடலைப் பின்பற்றிப் பாடிய தம் பெரியபுராணத்தில், சுந்தார்தேவாரத்தில் வரும் அத் தொடர் சங்கப்புலவர்களைக் குறிக்கும் எனக் கூருமை யாலும், பாணர், சைவசமயத்தவரே எனத் துணிந்து கூறுவதற்கில்லை,

பாணர்பாடல்களைப் படித்துப் பார்க்கின், கடவுள் உண்டு ; அவரைக் கைகூப்பித் தொழுதல் வேண்டும்; கல்வி கற்றல், கடவுள் தொடர்பான சிகழ்ச்சி ; 'கை தொழு மரபின் கடவுள் சான்ற செய்வினே மருங்கு;” (ஒதற் பிரிவு) உரைத்த குள் பொய்க்காரைத் தெய்வம் ஒறுக் கும்; அவலம்....அலைவாய்ச் செருமிகு சேயொடு உற்ற குளே, இவ்வுலகில் இறந்தார் போய்ப் பிறக்கும் மறுமை உலகம் உண்டு : “மறுமை உலகத்து மன்னுதல் பெறுமே.” கரகம் உண்டு; பெண்கொலை போன்ற பெருங் குற்றம் புரிந்தவர், அந் நரகிடைச் சென்று மீளாத் துயர் உறுவர்; 'பெண்கொலை புரிந்த நன்னன் போல, வரையா விரையத் துச் செலீஇயர். பேய் உண்டு ; அது பிணம் கின்னும்; பலி கொடுத்தால் பணி செய்யும் ; பேய் நடுஇரவில் இயங் கும் கன்மை உடையது. பேய் மகள் பற்றிய பினம்;” “கழுத வழங்கு யாமம்'; 'ஊட்டரு மரபின் அஞ்சு வருபேய்” என்ற கொள்கைகளே உடையவராகக் காணப் படுகின்றார் பரணர் சமயச்சார்பான பரணர் கொள்கை

களாக இவற்றையே காண்கிருேம்.