பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பரணர்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. வாழ்க்கைநிலை

பரணர் வாழ்வுநாள்வரை வாழ்ந்தவராவர் , தமி ழகத்தின் எல்லாப் பகுதிகளுக்கும் சென்று, ஆங்காங் குள்ள அரசர்கள், அரும் பெருந் தலைவர்கள், அவர்கள் ஆண்ட இடங்கள், அவர்க்குரிய மலைகள், ஆறுகள், அவ் வவ் விடங்களில் நிகழ்ந்த அரிய நிகழ்ச்சிகள் ஆகிய இவற்றை நேரில் அறிந்து பாராட்டுதற்கு வேண்டிய ஆயுட் காலத்தை அவர் பெற்றிருந்தார். பரணர் பாராட்டிய 'அரசர்களுள், உருவப்பஃறேர் இளஞ்சேட் சென்னியும், சேரன் செங்குட்டுவனும் இடம் பெற்றுள்ளனர். இவ் விரு அரசர்களுக்கும் உள்ள உறவு முறையினேக் கீழ்வரு மாறு கொள்வர் ஆராய்ச்சியாளர். உருவப்பஃறேர் இளஞ் சேட் சென்னியின் மகன், கரிகாற் பெருவளத்தான்் ஆவன்; கரிகாலன் மகன் சோழன் மணக்கிள்ளி; இக் கிள்ளியின் மகள் தற்சோணையும், இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனும் மணந்து பெற்ற மகனே செங்குட்டுவன். ஆக, இம் முறைப்படி கொண்டால், இளஞ்சேட்சென்னி, கரிகாலன், மணக்கிள்ளி, நற்சோணே, செங்குட்டுவன் ஆகிய ஐந்து தலைமுறைக்காலம் வரையிலும், பரணர் வாழ்ந்திருத்த காரணத்தினலேயே, தமிழ்நாட்டு வரலாற்றின் பெரும் பகுதியினே அறிந்துகூற அவரால் முடிந்தது போலும்.

பாணர், அரசர் பலரைச் சேர்ந்து பாராட்டியுள்ளார் என அறிய முடிகிறதே அன்றி, அவர் முதன்முதல் கண்டு பாராட்டிய அரசர் யார்? எந்த அரசன் அவையகத்தில் நீண்டதோர் கிள்ள் வாழ்ந்திருந்தார் என்பனவற்றை அறிக் துகொள்ள முடியவில்லை. பரணர் பாராட்டைப் பெற்ற அரசர் பலராயினும், அவருள், அவர் பாராட்டுதலே மிகுதி யாகப் பெற்ற அரசன், சேரன் செங்குட்டுவனே ஆதலா லும், அவன் பரணர் பாடல் கேட்டு மகிழ்ந்து, அவர்பால் பெருமதிப்புற்று, தன் மகனேயும் அவரைப்பேர்ல் அறி வுடையனுக்க வேண்டும் என்ற ஆசையால் அவரிடம் ஒப்படைத்தான்் எனக் கூறப்படுதலாலும், பரணர் சேர