பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பரணர்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. பரணர் மேற்கொண்ட உவமைகள்

செய்யுள்அணிகள் எண்ணற்றன. உள எனினும், பழந்தமிழ்ப் புல்வர்கள் உவமை அணி ஒன்றையே பெரி தும் விரும்பி மேற்கொண்டனர் ; தெரிந்த ஒரு பொரு ளேக் காட்டித் தெரியாத ஒரு பொருளை விளக்குவது உவமை, தாம் உணர்ந்த ஒன்றைப் பிறர்க்கு உணர்த்த வும், பிறர் உணர்ந்த ஒன்றைத் தாம் உணரவும் பயன்படு வதே மொழி ; உண்ர்த்தலும் உணர்தலுமாகிய தொழி லிற்கு உறுதுணையாய் நிற்பது உவமை; உணர்ந்த ஒன்றை உணராதார்க்கு உணர்த்த விரும்புவோர்க்கு, அவர் செயலை எளிதாக்கித் துணைபுரிவதில் உவமை போல் சிறந்தது வேறு இல்லை. ஆகவே, சங்ககாலப் புலவர்கள், உவமை

அணி ஒன்றையே விரும்பி மேற்கொண்டனர்.

பாணர் மேற்கொண்ட உவமைகள், பாக்களின் பொருளைத் தெளிவாக்கப் பயன்படுதலோடு, அக்கால மக்களின் மனவளத்தை விளக்குவனவாகவும், அரிய அற வுரைகளே அறிவிப்பனவாகவும் அமைந்து, கற்ருேர்க்குக் கழிபேர் உவகை அளிக்கும் தன்மையன ; அவர் கை யாண்ட உவமைகள் அவ்வளவையும் எடுத்துக்கூறல் இயலாது; ஆகலின், அவற்றுள் சிலவற்றை மட்டும் ஈண்டு நோக்குதல் நன்மும், -

குழந்தை, தாயின் அணப்பிலேயே இருந்து வளர் வது; கன்குறையையும் முறையையும் சொல்லால் எடுத்து இயம்பும் ஆற்றல் அற்றது; அதனல், அவை நேர்க்க போதெல்லாம் அழும் இயல்புடையது ; குழந்தை அழுவது கண்டால், அதற்குக் குறையுண்டு என அறிந்து ஆவன

செய்வது தாயின் கடமை; அத்தாய் தன் கடமையில் தவறின், குழந்தை அழுது அழுது சாகும் ; தாயுள்ள குழந்தைகளின் கிலேயே இதுவெனின், தாயற்ற குழந்தை களைப்பற்றிக் கூறவேண்டுவதில்லை; அதன் குறையறிந்து காப்போர் இன்மையால், அது ஒயாது அழுதுகொண்டே யிருக்கும். குழந்தைகளின் இவ்வியல்பினை உணர்ந்த