பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பரணர்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாணர் மேற்கொண்ட உவமைகள் 41

யினை மீன்கள் அறிந்துகொள்ளுமோ என்று அஞ்சிற்று. அதல்ை, அது கன் கால்களை ஒசையெழாவண்ணம் மெல்ல மெல்ல எடுத்துவைத்து கடந்து செல்லலாயிற்று. நாரை வின் இக்கடை, பரணர்க்குப் பெருகையும் வியப்பும் அளித்தது; அது மட்டும் அன்று; காரை கடந்துசெல்லும் அக்காட்சி, காவல் செறிந்த ஒரு வீட்டிலே களவாடச் சென்ற கள்வன் ஒருவன், தன் வருகையை வீட்டாரும், வீட்டுக் காவலரும் அறிந்துகொள்ளாவண்ணம் தன் அடிகளே ஒலி எழாதவாறு மெல்லமெல்ல எடுத்துவைத்து கடந்து செல்வதையும் அவருக்கு கினைப்பூட்டிற்று. உடனே, பரணர் அவ்விரண்டையும் ஒன்றுசேர்த்து,

K. : ளிேரும் பொய்கை இாைவேட் டெழுந்த

வாளே வெண்போத்து உணி இய காரை, தன் அடிஅறி. வுறுதல் அஞ்சிப் பைப்பையக் கடியிலம் புகூஉம் கள்வன் போலச் சாஅய் ஒதுங்கும் (அகம்: உஎசு.)

என உவமை கூறி அமைத்தார்.

எவரும் ஏறி அடையவொண்ணு அருமையும், பெரு மையும் உடைய மலை ஒன்று ; அதன் உச்சியில் மிகப் பெரிய தேன்கூடு ஒன்று இருந்தது; அதைக் கண்ணுற் ருன் ஒருவன் ; கண்ட அவனுக்கு அத்தேனே எவ்வா றேனும் உண்ணவேண்டும் என்ற ஆசை உண்டாயிற்று : எழுந்த ஆசை அளவின்றி வளர்ந்துகொண்டே சென்றது; நாக்கிலும் நீர் ஒழுகத் தொடங்கிவிட்டது. ஆனுல், விரும் பும் அவன் நிற்கும் இடமோ, அப் பெருமலையின் அடிவா ாம் ; வரைஏறிப் பெறலாம் என எண்ணினலோ, அவன், வரையேற இயலாவாறு இருகையும் இழந்த முடவன்; ஆகவே, வரையேறிப் பெறுவதும் அவளுல் இயலாது. அக் கிலேயில், ஆசையோடு கிற்கும் அவன், முட்ம்பட்ட தன் இரு கைகளையும் குடையாக வளைத்துக்கொண்டு, அத் தேனடையைச் சுட்டிக் காட்டிக்கொண்டே, எச்சில் ஒழு கும் தன் வெறும்வாயைகக்கி நக்கி இன்பு றலாயினன்.