பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பரணர்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 ப ர ன ர்

அழகும் ஆண்மையும் அன்பும் அருளும் கிறைந்த தலைமகன் ஒருவன் பால் உள்ளத்தைக் கொடுத்துவிட்ட ஒரு பெண், அவனே அடைந்து அருகிருந்து இன்புற விரும்புகிருள்; ஆனால் அத் தலைவனே அடைதல் தன்னல் இயலாது என்பதை உணர்கிருள் ; பெண்ணியல்பால் தன். காதலைப் பலர்க்கும் கூறிப் பயன்பெறும் உரிமையை அவள் இழந்துவிட்டாள்.

'உடம்பும் உயிரும் வாடியக் காலும்

என்னுற் றனகொல் இவையெனின் அல்லது, கிழவோம் சேர்தல் கிழத்திக் கில்லே’

என அவள் உரிமை பறிக்கப்படுதலும் காண்க. ஆகவே, அக் கிலையில் அவள் அவனே அடைந்து இன்புறுதற்கு மாருக, அவனேக் காண்பதைமட்டும் பெற்றே இன் புற லாயினள். இதனுல் அவள் கிலே, அம்முடவன் கிலேயோடு ஒத்திருப்பது உணர்ந்த பரணர்,

'கெடுவாைப்

பெருந்தேன் கண்ட இருக் கை முடவன்,

உட்சைச் சிறுகுடை கோலிக் கீழிருந்து,

சுட்டுபு சக்கி யாங்குக் காதலர்

நல்கார் கயவார் ஆயினும்,

பல்காற் காண்டலும் உள்ளத்துக் கினிதே.” (குறுந்: சுo.)

என்று பாடியுள்ளார்.

கணவரோடு கலந்து வாழுங்கால் கவின் பெ ற விளங் கும் மகளிர் துதல், கணவர் பிரிந்தக்கால், மாசுற்ற மதியே போல் மங்கித் தோன்றும், அம் மாற்றத்தைப் புலவர்கள் பசலேநோய் என்பர் ; பசலேயாவது, மகளிர் கணவரைப் பிரித்த காலத்து அவர்க்கு முன்புள்ள நெற்றியின் ஒளி கெட்டுக் கண்ணுடியில் வாயில்ை ஊதியபொழுது ஆவி படர்ந்து ஒளி மழுங்குவதுபோல வேறுபட்டுக் காட்டும் தன்மை,” என்று விளக்கம் கூறுவர்; பசலை, விளக்கற்றம் பார்த்துப் புகுந்து அவ்விளக்கு வந்தக்கால் அகலும்