பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பரணர்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாணர் மேற்கொண்ட உவமைகள் 43

இருளேபோல், கணவர் பிரிந்த உடனே பற்றிக்கொண்டு, அவர் வரவு அறிந்தவுடனே அற்று நீங்கும் இயல்புடை யது; இந் நோயின் தன்மையை ஒரு தலைவி, தன் தோழிக்கு விளக்க விரும்புகிருள் : தோழி! நாம் நாள் தோறும் நீர் கொண்டுவரும் குளத்தில், நீர்மீது படர்ந்திருக்கும் பாசி, நீர்க் குடத்தை அழுத்தியவழி அகன்று, அதை வெளியே எடுத்த உடனே கூடிவிடுவ தைக் கண்டுள்ளனே அன்றே , அப் பாசியைப்போலவே, இப் பசலையும் கணவர் வந்தக்கால் அகன்று, அவர் அகன் றக்கால் பற்றிக்கொள்கிறது, என்று கூறி விளக்கினுள். இவ்வாறு, மகளிர்க்கு வரும் இந் நோயின் தன்மையை அம் மகளிர் அறிந்த பொருளையே உவமையாகக் காட்டி விளக்கும் பரணர் புலமையின் சிறப்பே சிறப்பு.

'ஊருண் கேணி உண்துறை தொக்க

பாசி அற்றே பச?ல ; காதலர் தொடுவுழித் தொடுவுழி ங்ேகி விடுவழி விடுவுழிப் பாத்த லானே? (குறுங் : க.க.க.) ஆம்பலும் தாமரையும் கலந்து படர்ந்துள்ள பெரிய நீர்நிலை ஒன்றில், ஆம்பல் மலர்களுக்கிடையே அழகிய தாமரை ஒன்று மலர்ந்துளது. பெருங்காற்று வீசத் தொடங்கியது ; ஆம்பலினும் தாமரை மலர் சிறிது பருத் தது. ஆகவே, அது காற்ருல் அலைப்புருமல் இருந்த இடத்திலேயே நிலைத்து கிற்கிறது ; ஆனல், ஆம்பல் மலர்கள் உருவுச் சிறுமையும் உயர்ந்த கண்டும் உடைமை யால் இடம் பெயர்ந்தும் தல்ை அசைத்தும் ஆடத் தொடங்கிவிட்டன : அவ்வாறு அசையுங்கால் அவை, தாமரைமலர் வரையும் சென்று தாழ்ந்து மீண்டு மேலெழ லாயின; இவ் வியற்கைக்காட்சியின்க் கண்டார் பரணர்: அவர், அரண்மனையில் இருந்து பழகியவர்; அங்கே அவர் கானும் காட்சியொன்றை, இவ் வியற்கைக்காட்சி கினே ஆட்டிற்று ; அரசமகள் ஒருத்தியும் அவள் தோழியர் களும் ஒன்றுகூடி இருக்கின்றனர் ; திடீரென அரசமக ளுக்கு ஆற்ருெணுச் சினம் பிறந்துவிட்டது ; அவள் சினம்