பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பரணர்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாணர் காலமும் அவர்காலப் புலவர்களும் .

சேற்றுகிலையினைப் போக்க, செங்கரும்பினே அரிந்து போட்டு அடுக்குவர்; தமிழக வீடுகளில், வரும் விருந் தினரை விரும்பி யேற்று உபசரிக்கும் தொழில் மிகுதி யால், பெண்கள் தங்கள் கணவன்மார் வருகையினையும் அறியாராவர். - - .

தமிழக நகரங்களில் மண்ணே அரைத்துக் கட்டிய மாடங்கள் கிறைந்திருக்கும்; விழா இல்லாக் கர்லங்களி அம் மக்கள் ஆரவாரம் மிகுந்திருப்பதால், ஊரார் நெடிது விழித்திருப்பர் : மாநகர்களில் வளம் பல தலைமயங்கும் ஆவண வீதிகள் பல இருக்கும்; இரவில் நகர்க்காவல்ர், உறங்காக் கண்ணராய் ஊர்சுற்றிக் காவல் புரிவர்; அக் காலப் படைவீரர்கள் பலமொழி அறிந்திருந்தனர்; அவர் கிள், தங்கள் மார்பில் உண்டாய புண்களே, ஊசியும் நாலும் கொண்டு தைத்து மருந்து வைத்து மாற்றுவர். - தமிழ்மக்கள், திரைகடலோடிப் பெரும் பொருள் திரட்டுவர் ; புறநாட்டு வாணிபம், மரக்கல வழியே நடை பெற்றது ; சங்கை அாத்தால் அறுத்து வளையல், கழங்கு முதலியன செய்வர் ; பொன்னின் உரை காணும் கட்ட ளைக் கற்களைத் தமிழர்கள் அறிந்திருந்தனர்; பெர்ன்னும் பல அணி செய்து மகிழ்ந்தனர்; உப்பையும் மீனையும் விற்றுப் பிழைப்போரும் இருந்தனர். பஞ்சை வில்லால் அடிக்கவும் பழகியிருந்தனர். -

தம் ம்களே விரும்பி வந்தோர் வேந்தரேயாயினும், அவர் கரும் பொருள் எத்துண்ேப் பெரியவாயினும், அவர் பால் பெருந்தகைமை இல்லாயின், அவர்க்குத் தம் மகளைக் கொடுக்க விரும்பாப் பேர் உள்ளம்பட்ைத்த தந்தையர் பலர் தமிழகத்தில் வாழ்ந்திருந்தனர். தம்மையொத்த, வீரரோடன்றி இழிந்தோருடன் பொர விரும்பாப் பேராண்மை மிக்க தறுகண் மறவர் பலரும் இருந்தனர்.

ர்ே விழாவும் பிறவிழாவும் சிறக்கக் கொண்டாடினர்; இளைஞர், அவலே வாயிலடைத்துக்கொண்டு நீரிற் குதித்து.

ஆடுவர்; பண்டைத் தமிழர்கள், பேய்க்குப்பிலிே