பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பரணர்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எ. பரணர் காலமும் அவர்காலப் புலவர்களும்

தமிழ்மொழியும், தமிழரசும் சால உயர்ந்த நிலையில் ஒளிர்வுற்றிருந்த காலம் சங்ககாலமாகும். அச்சங்ககாலம், கி. பி. இரண்டாம் நூற்ருண்டைச் சேர்ந்ததாகும் என்பர் வரலாற்று நாற் பேராசிரியர் பலரும்; ஆகவே, சங்ககாலப் புலவர்களுள் தலைமைக்கண் கின்ற பரணர், (கஅ00) ஆயி ரத்தெண்னுாறு ஆண்டுகளுக்குமுன் வாழ்ந்தவராவர்.

பரணர் வாழ்ந்திருந்த காலத்தில், தமிழகத்தை முடி வேந்தர் மூவரும் ஆண்டுவந்தனர்; அவர்கட்கு அடங்கியும் அடங்காமலும் ஆங்காங்கே கு று கில ம் ன்னர் பலர் வாழ்ந்து வந்தனர்; பேர் அரசர்கள், தம்மை யொத்த பேர் அரசர்களோடும் ஏனைய குறுகில மன்னர்களோடும் பகை கொண்டு போர் புரிந்து தம் வெற்றியை நிலைநாட்டுவதை விரும்பினர் ; பேர் அரசர்களின் துணைகொண்டும் கொள் ளாதம் தம்முட் போரிடுவதைக் குறுகில்மன்னர்கள் வழக்கமாகக் கொண்டிருந்தனர்; அவர்கள் முடிவேந்தர் களுக்குத் துணே போவதும், ஒாேவழி அவர்களையே பகைத்துக் கொள்வதும் உண்டு. பெரும்படையும் போற்ற அம் பெற்ற பேரரசர்கள், தங்கள் காட்டுக் குடிகள் அச்ச மின்றி வாழ வழிசெய்து தருவர் எனினும், பகைவர் களைத் தீயிட்டு எரித்தலும், அங்காட்டு விளைநிலங்களைத் தம் யானே முதலியவற்ருல் அழித்தலும் செய்து ஆங்கு வாழ் மக்களுக்குத் துயர்பல தருவர். பரணர்காலத் தமிழ் அரசர்கள் வடநாடு சென்று ஆரிய அரசர்களை வென்று, அவர்கள் இமயத்தில் தங்கள் கொடியைப் பொறித்தும் வநதுளளன.ா.

தமிழகம் வளத்தால் தழைத்திருந்தது; களத்தே வெற் றிடம் காண இயலாவண்ணம் நீண்ட கதிர்களைக்கொண்ட நெற்கட்டுக்களால் கிறைந்திருக்கும்; நெல் அரிவோர், தமக்கு உணவு முதலியன கொண்டுவரும் வண்டிகள் வழி வில் சேற்றில் சிக்கிக்கொள்ளாவண்ணம், அவ்விடத்திய