பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பரணர்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாணரைப்பற்றிய புராணக் கதைகள் 51

குரல் கேட்டது; அதுகேட்ட புலவர்கள் அகமகிழ்ந்து, பலகையைக் கொண்டுசென்று சங்க மண்டபத்தே வைத்து முதலில் நக்கீரர் அதில் அமர்ந்தார். அவரை அடுத்துக் கபிலர் அமர்ந்தார்; பின்னர் பாணர் அமர்ந்தார்; இவ்வாறே அது வளர வளரப் புலவர்கள் அனைவரும் அதில் அமர்ந்து மகிழ்ந்தனர்.

புலவர்கள் தாங்கள் அவ்வப்போது பாடிவிட்டுச் சென்ற பாடல்கள் பலவாய்ப் பெருகியன்தக் கண்டு, அவற் அறுள் விளக்கம் அற்றனவற்றை நீக்கிவிட்டு நல்லனவற்றைக் கொள்ள விரும்பினர். ஆனல், அதைச் செய்துமுடிக்கும் ஆற்றல் தங்களுக்கில்லே என்பதை உணர்ந்தனர். தங்கள் ஆற்ருமைகண்டு மனம்கொங்து இருந்த புலவர்கள் முன்னே இறைவன் ஒரு புலவராய் வந்து அப்பாடல்களை வரிசைப் படுத்தி அவர்களோடு கலந்து வாழ்ந்துவந்தார்.

ஒருநாள், பொருள் இலக்கணத்தைப் புலவர்களுக் அறிவுறுத்த விரும்பிய இறைவன், அன்பின் ஐந்திணை' என்று தொடங்கும் செய்யுளைக் கொண்ட களவியல் நூல்ே ஆக்கி அவர்களிடம் கொடுத்தார். அவர் நூலைப் புலவர்கள் எல்லாம் பாராட்ட, நக்கீரர் மட்டும் குறைகூறிப் பழித் தார். அதைக் கண்ட இறைவன், அவர் செருக்கை அழிக்க எண்ணங்கொண்டு அரும்பொருள் செறிந்த அழகிய பாடல் ஒன்றைப் பாடி, ' இதற்குப் பொருள் கூறுக,” எனப் புலவர்களே நோக்கிக் கூறினர். அங்கில

யிலும் தம் செருக்குக் குலையாது கின்ற நக்கீரர், இப் பாட்டு பிழையுடையது,” என்றார். உடனே இறைவன், ‘இவன் பொருமை உடையன்; ஆகவே, இவன் குற்றம் என்றால் என் கவி குற்றமுடையதாகாது. நீங்கள் யாரேனும் கூறுங்கள், என் கவி குற்றமுடையதா?’ என்று கேட்டுகின்றார். புலவர்கள் வாய்திறங்கிலர்; அங்கிலேயில், * உங்கள் முன்னிற்கும் புலவன், மதுரைச் சொக்கன் ; உங்கள் பகைபோக்க வந்துளான்; பகையொழிந்து அவனை வணங்கி வழிபடுங்கள் ' என் றொரு குரல் கேட்டது.