பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பரணர்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. பரணரைப்பற்றிய புராணக் கதைகள்

பரணர்வரலாறு குறித்துப் பல நூல்கள் பல கதை கள் கூறுகின்றன ; அவரைப்பற்றிக் கூறும் அால்கள் பழைய திருவிளையாடல் எனப்படும், செல்லிநகர்ப் பெரும் பற்றப்புலியூர் நம்பி இயற்றிய திருவாலவாயுடையார் திரு - விளையாடற் புராணம், பரஞ்சோதி முனிவர் இயற்றிய திருவிளையாடற் புராணம், கடம்பவன புராணம் முதலிய தமிழ் நால்களும், ஆலாஸ்ய மஹாத்மியம் எனப்படும் வடமொழி நூலுமாம்.

(1) திருவாலவாயுடையார் திருவிளையாடற் புரா னத்தில், சங்கப்பலகை கொடுத்த திருவிளையாடல், ஊமை தமிழறிந்த திருவிளையாடல் என்ற இரு பகுதி களும், பரணர் முதலிய புலவர்கள் வரலாற்றை விளங்க உரைக்கின்றன; அவை கூறுவன :

மதுரையில் சங்கம் அமைத்துத் தமிழ் வளர்த்து வந்த புலவர்கள், தங்கள் புலமையின் தகுதி திறமைகளுக் கேற்ப, வரிசையாக அமர்வதற்கு விரும்பினர்; அதற்கு அவர்கள் அனைவரும் இருப்பதற்கேற்ற பெரிய இருக்கை - (ஆசனம்) ஒன்று வேண்டியிருந்தது. உடனே, கபிலர், நக்கீரர், பரணர் முதலாம் புலவர்கள் அனைவரும், சொக்க நாதன் கோயில் அடைந்து, தாங்கள் அனே வரும் இருந்து தமிழாராயத்தக்க இருக்கையொன்றை அளிக்குமாறு, அக்கோயி லிடம்கொண்ட பெருமானே வேண்டினர்; இறைவனும், புலவர்கள்தம் வேண்டுகோட்கிரங்கி, ஒருவர் இருக்கத்தக்க பலகை ஒன்றை அளித்தார். அதைக் கண் னுற்ற புலவர்கள், மறுவலும் இறைவனே நோக்கிப் பெரு மானே நாங்கள் அனைவரும் இருக்கத்தக்க பேரிருக்கை வேண்டினுேம்; ஒருவரே இருக்கத்தக்க இப் பலகை, கொண்டு நாங்கள் என் செய்வோம்,' என்று குறைகூறி கின்றனர். - - ^ --

அவ்வேளை, "இப்பலகை புலவர்தம் புலமை அறிந்து அவர் இருக்க இடம் வளர்ந்து கொடுக்கும்; என்று ஒரு