பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பரணர்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாணரைப்பற்றிய புராணக் கதைகள் 53

விேர்மட்டும் ரோடியது எவ்வாறு ?" என்று வெகுண்டு. வினவினுள். தான்் செய்த குற்றத்தை மறத்து, தன்னைப் பழிக்கும் அவளே, நான்முகன் நோக்கி, இக்குற்றம் நீங்க காற்பத்தெட்டுப் பிறவி, மக்களாய்ப் பிறப்பாயாக’ என்று சாபம் கொடுத்தான்்; பின் சாபம் கேட்டுவருந்தும் மனேவி யின் துயர்நிலை கண்டு இரங்கி, ' கின் உடல் உறுப்புக்கள் என விளங்கும் எழுத்துக்கள் ஐம்பத்தொன்றில், ஆகாரம் முதல் ஹகாரம் ஈருக உள்ள நாற்பத்தெட்டு எழுத்துக் களும், நாற்பத்தெட்டுப் புலவர்களாகவும், அகரவடிவின னை இறைவனும் ஒரு புலவனுய்த் தோன்றி, அப்புலவர் களுக்கு அறிவூட்டுவானுக,” என்று கூறிச் சாபவிடை தந்தான்்.

அவ்வாறே நாற்பத்தெட்டு எழுத்துக்களும் காற்பத் தெட்டு மக்களாய்ப் பிறந்தன ; அவர்கள் அனைவரும்கூடி ஆங்காங்குச் சென்று, தம் அறிவின் திறம்காட்டி வென்று இறுதியில் மதுரை சென்றனர் ; அவர்களே ஆலவாய்ப் பெருமான் புலவர் உருவில் வந்த வரவேற்ருர்; அப்போது அந்நாட்டு அரசனுக விளங்கிய வங்கிய சேகரன் புலவர் களின் பெருமையறிந்து, அவர்கள் இருப்பதற்கென்றே கோயில் வடமேற்கு மூலையில் மண்டபம் ஒன்று கட்டித் தந்து பெருஞ்சிறப்புச் செய்தான்்; அரசன் செய்த சிறப்பைக் கண்டு, அப்புலவர்கள்பால் அழுக்காறு கொண்ட பிற புலவர்கள், நாடோறும் அவர்கள் பால் சென்று வாதிட ல்ாயினர்; தொல்லை பொறுக்கமாட்டாப் புதுப்புலவர்கள், இறைவனே அடைந்து, அறிவினை அளக்கும் அளவு கோலொன்று வேண்டினர்; இறைவன் ஒருவர் இருக்கத் தக்க பலகையொன்று தந்து, ! தகுதியுடையார் ஒவ் வொருவர்க்கும் ஒவ்வொரு முழம் வளர்ந்து இடம் கொடுக்கும்; இதை அறிவு அறிகோலாகக் கொண்டு. உய்ம்மின்,” என்று கூறிஞன். புலவர்கள், பலகையைத் கொண்டு சென்று மண்டபத்தே வைத்து மலரிட்டு வணங்கி, முதன்முதலில் நக்கீசர் ஏறி அமர்ந்தார்; அவர் பின் கபிலர் ஏறிஞர்; பின்னர் பாணர் அமர்ந்தார்;