பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பரணர்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 ப ன் ர்

இவ்வாறே ஏனேய புலவர்களும் ஏறி அமர்ந்தனர். இதற்கு மேல் இப்புராணம் கூறும் கதை, முன்னர்க்கூறிய கதை வினையே பெரும்பாலும் ஒத்துளது. -

(8) கடம்பவன புராணத்தில், லீலாசங்கிரக அத்தி பாயத்தில், ஒவ்வொரு திருவிளையாடற் செய்தியும், ஒவ்வொரு செய்யுளில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் வரும் 15, 19 பாடல்கள் இரண்டும் பாணர் வரலாற்றின் பகுதிகள் சிலவற்றை உணர்த்துகின்றன. நக்கீரர், கபிலர், பரணர் உள்ளிட்ட புலவர்கள், இறைவனிடம் பலகையினை வேண்டிப்பெற்றது முதல் உருத்திரசன்மன் உரைவளம் உரைத்தது வரையுள்ள கதைகள், முன்னர்க்கூறிய புரா ணங்கள் கூறிய முறைப்படியே கூறப்பட்டுள்ளன.

(4) ஹாலாஸ்ய மஹாத்மியம் என்ற வடமொழி நூல், மதுரைச் சொக்கநாதர் மேற்கொண்ட திருவிளே பாடல்களே, அகஸ்தியர் சில முனிவர்களுக்கு அறிவிக்கும் முறையில் எழுதப்பட்டுளது ; அதில் உள்ள “ சங்கத் தவர்களுக்குச் சங்கப் பலகை தந்தது.” என்ற 57-ஆம் அத்தியாயமும், “ சங்கப் புலவர்களின் கலகத்தைச் சிவ பெருமான் தீர்த்தருளியது, என்ற 61-ஆம் அத்தியாயமும் பரணர் வரலாருக் கூதுவனவற்றைத் தொகுத்துக் காணின், அவை முழுதும் பரஞ்சோதி முனிவர் திருவிளையாடலிற் கண்டவாறே உள்ளன. ‘. . . . . . . . . . இக்கதைகள் அனைத்தையும் ஒப்புநோக்கியவழி, இவையெல்லாம் ஒன்றற்கொன்று மாறுபடக் கூறுகின்றன . என்பது புலனும் திருவாலவாயுடையார் திருவிளேயர்டல், பரஞ்சோதி முனிவர் திருவிளையாடல் இரண்டனுள், பழைய . திருவிளையாடல் எனச் சிறப்பிக்கப்பெறும் திருவாலவா யுடையார் திருவிளையாடல் காலத்தால் முற்பட்டது. அதில் சங்கப்புலவர்களின் முற்பிறப்பு வரலாறு ஒன்றும் கூறப் படவில்லே ; சங்கப்புலவர்களோடு வேறு புலவர் பலர் வாதம் புரிந்தனர் என்றும், அதனுல் மனம் தள்ர்ந்த சங்கப் புலவர்கள், மதுரை சோமசுந்தர்ப் பெருமானிடம் முறை யிட்டுப் பலகை வேண்டினர்கள் என்றும் கூறப்படும்