பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பரணர்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாணரைப்பற்றிய புராணக் கதைகள் 55.

செய்திகளும் அதிற்காணப்படவில்லை; சங்கப் புலவர்கள், நாமகள் உடலுறுப்புக்களின் அம்சமாம் என்றும், நாமகள், நான்முகன்பால் பெற்ற சாபத்தின் விளைவால், அவ்வெழுத் துக்களே அப்புலவர்களாய்ப் பிறந்தன என்றும் கூறப்படும் புலவர்களின் முற்பிறப்பு வரலாறுகளும், பிறவும் வட மொழி ஆலாஸ்ய மஹாத்மியத்திலும், அதை முதல் அனலாகக்கொண்ட பரஞ்சோதியார் திருவிளையாடற் புரா ணத்திலும் மட்டுமே கூறப்பட்டுள்ளன ; ஆகவே, இவை யெல்லாம் பின்னர் துழைக்கப்பட்ட பிற்காலத்தார் கற்பனைகள் என்பதே முடிபாகக் கொள்க. இவ்வாறு, முன்னூலில் இல்லாத ஒன்று, பின்னூலில் அழைக்கப்பட் டுள்ளன என்பதுமட்டும் அன்று; முன்னூலில் கூறப் பெற்ற நிகழ்ச்சிகள், பின்னூலில் முரண்படவும் கூறப்பட்

டுள்ளன. -