பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பரணர்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரணர் பாடியவை என வழங்கும் பாடல்கள், 57

சிவபெருமான் திருவந்தாதி, நூ லு செய்யுட்கள் அந்தாதித்தொடராக அமைந்துள்ள ஒரு பிரபந்தம். பாட்டுக்களில், முன்னிரண்டடிகளில் ஒர் யமகமும், பின் னிரண்டடிகளில் வேருேர் யமகமும் அமைந்திருக்கின் றன ; யமகம், மாலைமாற்று, ஏகபாதம், எழுகூற்றிருக்கை போன்ற நூல்கள் முற்காலத்தில் இல்லை. பாணர் பாக்க ளாகப் பண்டை நூல்களில் வரும் செய்யுட்களில், வட சொற்கள் மிக மிக அருகி ஆளப்பட்டுள்ளன ; அவை அனைத்திலும் வந்துள்ள வடசொற்கள் ஐம்பதிற்கு மேற் படா; ஆனல், இவ் வந்தாதியில் வந்துள்ள வடசொற் களைக் கணக்கிட்டால் அவை நூற்றிற்கும் மேலாம். சங்கச் செய்யுட்களில் பயில ஆளப்படும், வெரீஇ, மரீஇ போன்ற அளபெடைச்சொற்கள், இவ் வந்தாதியில் பாண்டும் காணப்படவில்லை; பண்டைப் பாடல்களில் இடம் பெருத, கின்ற என்ற நிகழ்கால இடைகிலேயால் இயன்ற வினேச்சொற்கள், அந்தாதியில் அளவின்றி ஆளப் பட்டுள்ளன. மேலும், சங்க நூல்களுள், புராணக் கதை. களைப் பெரும் அளவில் குறிப்பிடும் இயல்பினதான் கலித் தொகையில் காணப்படும் கதைகளினும், மிகுதியான புராணக் கதைகளே அந்தாதி கொண்டுளது; கூறிய இக் காரணங்களால் சிவபெருமான் திருவந்தாதி, பரணர் இயற் றியது அன்று. பிற்காலச் சைவப்புலவர் ஒருவரால் பாடப்பட்டது என்றே கொள்ளுதல் வேண்டும். -

திருவள்ளுவமாலையில் வந்துள்ள செய்யுட்கள் எல் லாம், திருவள்ளுவர், அவர் திருக்குறள் இவற்றிடத்தில் பெருமையும், மதிப்பும்கொண்ட ஒருவரோ பலரோ அவர்களைப் பாராட்டிப் பாடிய பாடல்களே, அவை தாம் பாடியன எனப் பிறர் அறியின், அப்பாடலை மதியார் என மனத்திடைக்கொண்டு, சங்ககாலப்புலவர்கள் பெயர்க ளோடு இணைக்கப்பட்டுவிட்டன என்றே அறிஞர் கருது வர்; ஆகவே, அப் பாடல்களுள் ஒன்ருய, 'மாலும் குற ளாய்' என்ற பாட்டும் பரணர் பாடியது அன்று என்றே கொள்க. - * . . . . . -