பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பரணர்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரணராற் பாடப்பட்டவர் 69

வாருங்கள்,” என்று அழைத்துக் கொண்டு செல்ல லாயினர். உடன் வருமாறு விறலியரை அழைக்கும் அவர் பாடலைப் பாருங்கள் : . . . . . . .

‘யாமும் சேறுகம் : யிேரும் வம்மின், !

துயலும் கோதைத் துளங்கியல் விறலியர்! கொளவல் வாழ்க்கைதும் கிள்ை இனிது உணி இயர்

பெருஞ்சினக் குட்டுவன் கண்டனம் வாற்கே. '

(பதிற்: சக.)

செங்குட்டுவன் நாடு சென்று சேரும் எளிமை உடையதன்று ; சேய்மைக்கண் உள்ளது ; இடையே கொடிய கிலங்களைப் பெற்றது ; செல்லும்வழி, கொல் களிறும், கொடும்புலியும் போரிடும் பெருங்காடுகளைக் கொண்டது; நாட்டுவாழ் விலங்குகளின் கொடுமை ஒரு பால் கிடக்க, இயற்கையாலும் இடர்பல கிறைந்தது ; போகும்வழியில், மழை பெய்யாது பொய்த்துவிட்டமை யால், செல்வார் உண்னும் நீர்பெருது பெருந்துன்பம் உறுவர் ; நீரில்லாமையால் உலர்ந்துபோன நீண்ட மூங்கில் களால் நெருப்புத்துயர் போன்றவற்றையும் பொறுத்தல் வேண்டும்; செங்குட்டுவனேக் காண்போர், இத்தகைய கடத்தற்கரிய வழிபல கடந்துசென்றே காண்பர்; பரணரும் அவற்றைக் கடந்துசென்றே கண்டார்: செங்குட்டுவன்க் காணவேண்டும் என்ற அவர் வேட்கை, வழியருமை உடையது என எண்ண மறுத்தது; தாம் வந்த வழிகளின் அருமையினே அவரே, செங்குட்டுவன்பால் அறிவித்

துள்ளார் :

வயக்களிலு + - io - - - - - - - - - - - - - - ................................... வழையமல் வியன்காடு சிலம்பப் பிளிறும் மழைபெயல் மாறிய கழைதிரங்கத்தம் ஒன்று இரண்டு அல, பலகழிந்து, கிண்டேர் வகையில் நெடுந்தகை காண்டு வந்திசின். (பதிற்: சக)