பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பரணர்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாணாற் பாடப்பட்டவர் - 71

சங்கும் பிற போர்க்கருவிகளும் எழுப்பும் ஒலி, அவனுக்கு அவ்வேட்கையினே கினேப்பூட்டிவிடும்; அதனுல், அவன் கண்கள் அரிதாகப்பெற்ற அச்சிறு துயிலையும் செவ்வனே பெறுவதில்லை : -

  • பகை வெம்மையின் பாசறை மரீஇப்

பாடரிது இயைந்த சிறுதுயில் இயலாது கோடு முழங்கு இமிழிசை எழுப்பும் பீடுகெழு செல்வம் மரீஇய கண்ணே.’ (பதிற்று நி0)

இவ்வாறு, செங்குட்டுவன் போர்க்குணம் பலவற்றைப் பாராட்டிய பரணர், அவன் வெற்றிச் சிறப்பை வேறுவகை யாலும் வியந்து பாராட்டுவாராயினர்; புலவர்கள், ஏர்க் கள உழவர்களையும், போர்க்கள அரசர்களையும் பாடும் பண்புடையவராவர் ; அதனல் அரசர்களே உழவர்களாகக் கொண்டு, அவ்வுழவர்கள் தொழிலே எல்லாம் அரசர் களுக்கு ஏற்றிப் பாடுவதையும் மரபாகக் கொண்டுள்ளனர்; பரணரும் அம்முறையினேப் பின்பற்றிச் செங்குட்டுவன் போர்ச்சிறப்புக்களைப் புறநானூற்றுச் செய்யுள் ஒன்றில் பாராடடியுளளாா :

உழவுத்தொழில் என்றால் அதற்கு உறுதுணையர்ய மேகம் தேவை ; அது, கறுத்து மழைபெய்யும் காலத்து மின்னலும் இடியும் தோன்றும். பெய்யும் மழையை நாற்றிசையும் பரவச்செய்யப் பெருங்காற்றுத் தேவைப் படும்; இவற்ருல் ஈரம்கொண்ட சிலமும் அங்கிலத்தை உழும் ஏரும் வேண்டும்; கிலத்தை உழுதுபெற்ற படைச் சாலில் விதைகளே விதைப்பர்; அவை விளைந்துவிட்ட கதிர்க் கணைகள் முற்றித் தலைசாய்த்து கிற்கும் , அவற்றை அறுத்துப் பேர்ரிட்டுக் களத்தே இருந்து, இரவலர்க்கும் பிறர்க்கும் வேண்டும் உணவளித்து உழவர் மகிழ்வர்.

எர்உழவர்தம் இச்செயலைப் போன்றே வில்லேர் உழவனுகிய வெல்புகழ்க் குட்டுவலும் யானைகள் மேகமாக, வீரர் கைவாள் மின்னலாக, போர்ப்பறை இடியாக, விரைந்து பாயும் குதிரைகள் வீசும்காற்ருக, வில்லினின்றும்