பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பரணர்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 ப ண ர்

களோ, கண்ணகிக்குக் கோயில் அமைத்து விழாவெடுத்த பெருஞ்சிறப்போ அவர் பாடல்களில் இடம் பெறவில்லை. இதல்ை, செங்குட்டுவனின் இவ் வரும்பெரும் செயல்கள், அவன் வாழ்வின் பிற்பகுதியில் நிகழ்ந்தனவாதல் வேண் டும்; பரணர், செங்குட்டுவனுக்கு முன் நான்கு தலைமுறைக் கால வாழ்வுடையவராதலின், அவர், அவன் ஆட்சியின் இடைக்காலத்தே இவ்வுலகு விட்டு மறைந்தாாதல் வேண் டும்; அதனுலேயே, அங்கிகழ்ச்சிகள், அவர் பாக்களில் இடம் பெறவில்லே போஅம் ; இல்லையேல், தம் வாழ்நாட் காலத்தே நிகழ்ந்த சிறுசிறு நிகழ்ச்சிகளையும், விடாது உரைக்கவல்ல பரணர், செங்குட்டுவனின் இவ்வரும்பெரும் செயல்களே, அவனைப் பாடிய பத்திற்கும் மேற்பட்ட பாடல் களுள் ஒன்றிலேனும் குறியாது போனமைக்கு வேறு காரணம் காண்பதற்கில்லை என எண்ணுவர் அறிஞர்.

செங்குட்டுவன் போர்ச்சிறப்பினேப் புகழ்ந்து பாராட் டிய புலவர், அவன் படைவீரர் மாண்பையும், பகைவரால் கேடு உறல் அறியா அவன் காட்டின் சிறப்பையும் பாராட்டி புள்ளார்; மேறனிழுக்கா மானம், மன்னர்க்கும், மன்னர்தம் படைவீரர்க்கும் பண்பெனத் திகழ்தல் வேண்டும் என்பர். தம்மினும் ஆண்டால் முதிர்ந்து தளர்த்தாரையும், ஆண் டால் குறைந்து ஆற்றல் முழுதும் வாய்க்கப்பெருதாரை யும், ஒத்த ஆண்டினாயினும், போர்க்களம் புகுந்து, போர்த்திறம் புரிந்துகொள்ளாதாரையும் பகைத்துப் போரிடல் பெரு வீரர்க்கு அழகன்று ; அது ஆண்மையும் ஆகாது, படை இழந்து நிற்பார் மீதும், படைவிட்டுப் பின்னிடுவார்மீதும் படை ஏவுதல் பழியாம் எனக் கொள் வது, பெருவீரராயினர்க்குப் பெருமிதம் தருவதாம். இப் பண்புகளையே மறனிழுக்கா, மானம்' என்பர் பெரியோர். செங்குட்டுவன்வீரர் இவ்வினத்தைச் சேர்ந்த வீரர்களா வர்; அவர்கள், தம்மையொத்த பெருவீரர்களுடனேயே போரிட விரும்புவர் ; போாற்றல் பெருதாரையும், புண் பெற்றுப் புகழ்கொள்ள்ாதாரையும் எதிர்ப்பதிலர்; போர் பல கண்டு, அப்போரில் பெற்ற புண்களிலைாய வடுக்கள்