பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பரணர்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாண்ாற் பாடப்பட்டவர்கள் 93.

துடியினே, அதன் வாரும் தளர்ந்து போகுமாறு ஒங்கி அடித்து ஒலிமிக எழுப்பி ஆரவாரம் செய்வர்,” என்று அவன் ஆண்மையினேப் பொதுவாகவே பாராட்டியுள்ளார்.

' நெடுநெறிக் குதிரைக் கூர்வேல் அஞ்சி, கடுமுனை அகலத்த கொடுவில் ஆடவர், ஆகொள் பூசவில், பாடுகிறந்து எறியும் பெருந்து டி. ’ - (அகம். கடன் உ)

(9) கண்டீரக் கோப்பெரு நள்ளி:

நள்ளி எனவும், கண்டீரக்கோப் பெருநள்ளி எனவும் வழங்கப்பெறும் இவன், கடையெழுவள்ளல்களுள் ஒரு வனுப்க். குடிணனுக்கு முற்பட்டோன் எனப்போற்றப் படுவோனுவன். தோட்டி என்ற மலைக்கும், அதைச்சூழ உள்ள மலைநாட்டிற்கும் உரியோன் ; வில்லாற்றல் மிக்க வீர்க்குத்தலைவன் ; இவன், தன் நாடுநோக்கி வருவார்க்கு யானேயும், தேரும், பொன்னும், பொருளும் அளிப்பான் ; இவன் அளிப்பது மட்டும் அன்று இவன் இல்லாக் காலத்தில், இவன் நாடுநோக்கிச் செல்வார்க்குப் பிடி யானைகள் பலவற்றை இவன் பெண்டிரும் அளிப்பர்.

ஒருநாள் நள்ளி, காட்டில் வேட்டையாடிக் கொண் டிருந்தான்் ; அக்காலை, அவ்வழியே வந்த வன்பரணர்,

வறுமையாலும், வழிதடைவருத்தத்தாலும் மெலிந்து

மரமொன்றின்கீழ் இருந்தனர் ; இருந்தாரை, அங்கிலேயிற்

கண்ட கள்ளி, தான்் வேட்டையாடிக் கொன்ற விலங்கின் தசையைக் கடைகோலால் உண்டாக்கிய தீயில் சுட்டு

அவர்க்கும், அவரோடு வந்தார்க்கும் வழங்கின்ை; ஆாப் பசித்த அவர்கள், அதுதிர உண்ட பின்னர், மீண்டும் வழியே செல்லலாயினர்; அங்கிலேயில், நள்ளி, காட்டில் வாழ்கிறேன் ; கையில் ஒன்றுமிலேன்,” என்று கூறிக் கழுத்தில் அணித்திருந்த ஆர்மொன்றை அவர்க்கு அளித் தான்் ; அவன் இன்னுன் என்பதை அறியாத வன்பரண்ர், வேண்டாதபோதே விருந்தேற்றுப் போற்றும் யோர் ?