பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-1.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. அகம்பல் - மால் - ஆதனுர்

அகம்பல் என்பதோர் ஊர் ஆதனர் என்ற பெய ருடையராய இப் புலவர், அவ்வூர்த் தலைமையினையுடைய ராதல் குறித்து, மக்கள், அகம்பல்-மால் ஆதனுர் என அழைத்தனர். மதுரை மாவட்டம் பெரியகுளம் வட்டத் தில் அகமலே என்ருேர் ஊர் உளது. பண்டு அகம்பல் என வழங்கியதே, திரிந்து இன்று அகமலே என வழங்கு கிறதுபோலும் என்று எண்ணுவாரும் உளர். ஆதன் என்பது, மக்கள் பெயராகவும், மாநகர்ப் பெயராகவும் பண்டு வழங்கி வந்துளது; ஆதன் அவினி, ஆதனூர் என்பனவற்றைக் காண்க. ஆதன் என்ற பெயருடையார், சேரவேந்தரைச் சேர்ந்தோராவர் என்று எண்ணுதற்கு இடனுண்டு.

ஒருவன், வினேயொன்றை மேற்கொண்ட விடத்து, அவ் வினே இனிதே முடியும்வரை, அவன் தன் மனத்தே வேறு எத்தகைய எண்ணத்திற்கும் இடங் தாராது, அவ் வினே இனிது முடிதற்காம் எண்ணமே உடையணுதல் வேண்டும் : அக் கிலேயில், மனேவி மக்கள்பற்றிய எண்ணம் எழுமாயின், அவன் உள்ளம், அவர்பால் சென்று விடுத லால், எடுத்த வினே இடையூறு உறும் : ஆதலின், அக் கிலேயில் அவர்களே உள்ளுதல் கூடாது எடுத்த வினே இனிதே நிறைவேறின், அக் கிலேயில், வெற்றியுற்றதால் உண்டாய இம் மகிழ்ச்சியின, அவரோடு இருந்து நுகர் தற்கு இல்லையே என்ற எண்ணம், அவன் உள்ளத்தே எழல் இயல்பாம்; அதை அப்போது தடுத்தலும் ஆகாது; 'கிழவி கிலேயே வினையிடத்து உரையார்; வென்றிக் காலத்து விளங்கித் தோன்றும்," என்று கூறுவர் தொல் காப்பியனரும். w -

வேந்தன்கீழ் வினையாற்றும் வீரன் ஒருவன், தன் வேந்தன் வேற்றரசர் மீது போர் தொடுத்துவிட்டான் என அறிந்து, தன் அரிய மனேவியைப் பிரிந்து, அரசன் ஆன மேற்கொண்டு, போர்க்குச் சென்று, ஆண்டு அவனை